மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் யாருக்கும் பணம் கொடுக்கக்கூடாது, முடி, நகம் வெட்டக்கூடாது, அப்படி பண்ணினால் வீட்டில் மஹாலக்ஷ்மி கடாச்சம் குறைந்துவிடும் என்று கேள்விப்பட்டிருப்போம். இதுமட்டும்மல்லாமல் வெள்ளிக்கிழமைகளில் இன்னும் நிறைய விசயங்கள் செய்யக்கூடாது.
வீட்டில் மஹாலக்ஷ்மி கடாச்சம் நிறைந்தவர் பெண் தான். எனவே பெண்கள் சில விஷயங்களை வெள்ளிக்கிழமை நாட்களில் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டை ஓட்டரை அடிக்கக்கூடாது. யாருக்கும் நகை, வெள்ளி போன்ற பொருட்களை இரவலாக கொடுக்கக்கூடாது. இந்த மாதிரி பெண்கள் செய்தால் வீட்டில் செல்வச்செழிப்பு குறைந்து கடன் தொல்லை அதிகரித்துவிடும்.
பூஜை அறை ஜாமனம், வீட்டில் உள்ள அடுப்பு போன்ற பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது. வியாழக்கிழமையே இந்த பொருட்களை சுத்தம் செய்துவிட வேண்டும். பாத்ரூம், கழிவறையை கூட வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த நாள். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு விரதமிருந்து பூஜைகள் செய்துவந்தால் வீட்டில் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.