ஆன்மீகம்

வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கண்ணனை வழிபட்டு பிரச்சனைகள் தீரும் அதிசயம் நிகழும் ஆலயம்!

Mar 01 2022 04:56:00 PM

கேட்டது கிடைக்க வேண்டும் என்று நினைத்த பக்தர் ஒருவர் கண்ணனை மனமுருகி வேண்டிக்கொண்டார். திருப்பதி சென்று அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி தினமும் பெருமாளை வணங்கி வந்தார். ஒரு முறை அங்குள்ள ஒரு சத்திரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் முன்னே ஒரு சிறுவன் தின்பண்டம் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

varakapuri kannan perumal athisaya temple

அந்த சிறுவன் சாப்பிடுவதை பார்த்த அந்த பக்தர் குழந்தை எவ்வளவு அழகாக சாப்பிடுகிறது என்று நினைத்தார். அந்த சிறுவன் அந்த பக்தரை நோக்கி நான் யாரென்று தெரிகிறதா நான் தான் உன்னுடைய நண்பன் என்று சொன்னான். பார்க்க சின்ன பையனாக இருக்கிறாயே நீ எப்படி என் நண்பன் ஆகுவாய் என்று அந்த பக்தர் கேட்டார். அந்த பக்தரின் நண்பருக்குண்டான எல்லா பழக்கங்களையும் அந்த சிறுவன் சொல்லி காண்பித்தான்.

varakapuri kannan perumal athisaya temple

பின்னர் இந்தசிறுவன் தன்னுடைய நண்பன் தான் என்பதை உணர்ந்த அந்த பக்தர் தம்பி இவ்வளவு சாப்பிடாதே, உன் வயிறு வலிக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு அந்த சிறுவன் என் வயிறு வலிக்காது, உன்னுடைய வயிறு தான் வலிக்கும் என்றுசொல்லி இருக்கிறார். உடனே அந்த பக்தருக்கு வயிறு வலி வந்திருக்கிறது. இந்த சிறுவன் தான் கண்ணன் என்பதை உணர்ந்த அந்த பக்தர் கண்ணா உன்னை கண்டுவிட்டேன் என்று வயிற்று வழியால் துடித்தார்.

varakapuri kannan perumal athisaya temple

நான் உன் வயிற்றில் கைவைத்தால் உன் வயிறு வலி சரியாகிவிடும் என்று கண்ணன் சொன்னார். என் வயிறு வலி பற்றி எனக்கு கவலை இல்லை, நீங்கள் என் தலையில் வைத்து ஆசீர்வாதம் கொடுங்கள், எனக்கு உங்கள் ஆசிர்வாதம் தான் முக்கியம் என்று அந்த பக்தர் சொன்னார். அந்த பக்தர் சொன்னதை போலவே அவரின் தலையில் வைத்து அவருக்கு ஆசீர்வாதம் கொடுத்து அந்த பக்தரின் வயிற்று வலியை சரி செய்தார் கண்ணன். அந்த பக்தரின் பெயர் நாராயண தீர்த்தர். இன்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் வராகபுரி என்னும் வரகூரில் உள்ள கண்ணனை வழிபட்டு தங்கள் நோய் தீர்ந்த அதிசயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

varakapuri kannan perumal athisaya temple