நமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, நீதிமன்றத்துக்கோ வழக்கு பதிவு செய்து பிரச்சனையை தீர்த்துக்கொள்வோம். ஆனால் தஞ்சாவூரில் உள்ள வல்லம் ஆலங்குடி ஏகவுரி அம்மன் ஆலயத்தில் ஒரு வித்தியாசமான பழக்கவழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. தஞ்சாவூர் ஆலங்குடியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஏகவுரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சக்தி வாய்ந்த இந்த அம்மனை வழிபட பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஊர்பஞ்சாயத்திலும், நீதிமன்றத்திலும் நியாயம் கிடைக்காத மக்களும், நீதிமன்றம் சென்று நியாயம் கேட்க வசதி இல்லாத பக்தர்களும் இந்த கௌரி அம்மனிடம் வந்து முறையிடுகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி கௌரி அம்மனின் கைகளில் கட்டிவிடுகிறார்கள். சில நாட்களிலேயே கௌரி அம்மன் தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கொடுத்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
ஏக கௌரி அம்மணி சுற்றி இரண்டு நாகங்கள் அமைந்துள்ளன. ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தளம் இது. ராகு கேது தோஷம் நீக்கும் தளமும் இதுதான். நாகதோஷம், கால சர்ப்பதோஷம் போன்ற பல தோஷங்களை நீக்கும் திருத்தலமாகவும் இந்த வல்லம் ஏக கௌரி அம்மன் தளம் விளங்குகிறது.
பிராது கட்டும் பழக்கம் என்கிற நடைமுறையும் இந்த ஆலயத்தில் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது சொத்து பிரச்சனை, சொந்த பந்த பிரச்சனை, திருட்டு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை பூசாரியிடம் விளக்குவார்கள். பூசாரி அம்மனுக்கு அர்ச்சனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்காக முறையிடுவார். இந்த அர்ச்சனை முடிந்த சில நாட்களிலேயே பக்தர்களின் குறைகளை அம்மன் நீக்கிவிடுவார் என்றும் கோவில் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.