ஸ்லோகம்

ஐந்து ரூபாய் நாணயத்தை இந்த சங்கு மீது வைத்து வேண்டும்போது, எண்ணியது கிட்டும்! லட்சுமி வரத்தை கொடுத்தே ஆகவேண்டும்!

Dec 25 2021 10:53:00 AM

நாம் நினைத்த அனைத்து காரியங்களும் நினைத்தவாறே நடந்துவிடுவதில்லை. நாம் செய்த கர்மத்தின் பலனாகவோ அல்லது கடவுளின் ஆசி கிடைக்காத காரணத்தினாலேயோ நினைத்த காரியம் தள்ளிக்கொண்டே போகலாம். இதனால் தீராத மனஉ ளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இதனை போக்க சிலர் கோவில்களுக்கும் புனித தளங்களுக்கும் சென்று வருவதுண்டு. இதைத்தவிர வீட்டிலேயே சில செயல்களை செய்வதன் மூலம் நினைத்த காரியத்தை விரைவில் முடிக்க கூடிய சித்தி பிறக்கும்.

magalakshmi valampuri-sangu

முதலில் வலம்புரிச்சங்கு பற்றி அறிவோம். நாராயணின் கையில் இருக்கும் வலம்புரிச்சங்கானது நம்முடைய வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ஆற்றல் கொண்டது. நினைத்த காரியம் விரைவில் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய செயல் இதுவே. ஒரு வெள்ளைத்தாளில் நீங்கள் நிறைவேற வேண்டும் என நினைக்கும் காரியத்தை எழுதி, அதன் நான்கு மூலைகளிலும் மஞ்சள் வையுங்கள். வளர்பிறை வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்து ஒரு தட்டில் 5 ரூபாய் நாணயங்களை கொட்டி அதன் மீது வலம்புரிச்சங்கை வைத்து பூஜை செய்து வாருங்கள். காரியம் நிறைவேறும் வரை இதனை தொடர்ந்து செய்யலாம். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என நினைப்போர் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்துவந்தால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

magalakshmi valampuri-sangu

அதேபோல் சில மந்திரங்கள் சொல்லுவதாலும் அந்த காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். தினமும் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கீழ்கண்ட மந்திரத்தை 108 முறை சொன்னால் போதும், நினைத்த காரியம் ஜெயமாகும். 
'ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜீவாலய தீமஹி 
தந்நோ சக்கர ப்ரசோதயாத்'
என்னும் இந்த சக்கரத்தாழ்வார் மந்திரத்தை பிரம்ம முகுர்த்த வேளையில் 108 முறை தொடர்ந்து சொல்லிவர நினைத்த காரியம் வெற்றிபெறும்.

magalakshmi valampuri-sangu

மன தைரியம் கிடைக்க வேண்டுமென நினைப்போர், "ஸ்ரீராம தூத மஹாதீர ருத்ர வீர்ய சமுத்பவ அஞ்சனா கற்ப சம்பூத வாயு புத்ர நமோஸ்துதே'' என்ற ஆஞ்சநேய துதியை சொல்லிவந்தால் மன தைரியமும் வீரமும் கிடைக்கும்.

magalakshmi valampuri-sangu

கணவர் நீண்ட ஆயிலோடு வாழ, கணவர் மனைவிக்குள் அன்பு அதிகரிக்க, 
'மங்களே மங்களாதார 
மாங்கல்யே மங்கலப்ரத 
மங்களார்த்தம் மங்களேஸி 
மாங்கல்யம் தேஹிமே சதா 
சர்வ மங்கள மாங்கல்யே 
சிவே சர்வார்த்த சாதகே 
சரண்யே த்ரியம்பகே
தேவி நாராயணி 
நமோஸ்துதே'
எனும் நாராயணி மந்திரத்தை நேரம் கிடைக்கும்போது கூறி வர மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.