ஆன்மீகம்

எந்த நோயில் இருந்தும் குணமடைய இவரை வழிபட்டால் பலன் நிச்சயம் கிடைக்கும்!

Jul 05 2022 12:20:00 PM

பொதுவாக மனிதர்களுக்கு சில நோய்கள் வந்தால் மக்கள் மருத்துவர்களை நோக்கி செல்வார்கள். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய்களை தீர்க்க ஆலயங்களுக்கு செல்வோம். இனிமேல் கடவுள் விட்ட வழி என்று முடிவு செய்து கோவிலுக்கு சென்று கடவுளை தரிசிப்போம். ஆனால் ஒரு நோய் வருவதற்கு முன்னரே இந்த சித்தரை வழிபட்டால் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பித்து விடலாம்.

vaitheswararan temple siththar samathi

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் பற்றி யாரும் அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த ஆலயத்தில் நிறைய சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ளனர். தையல் நாயகியின் சன்னதிக்கு எதிர் புறத்தில் ஸ்ரீ அவதூது ரோக நிவர்த்தீஸ்வரர் ஜீவசமாதி அமைந்துள்ளது. இவரை வழிபடுவது பல நன்மைகளை நமக்கு வாரிக்கொடுக்கும்.

vaitheswararan temple siththar samathi

சிலருக்கு அம்மை நோயின் அறிகுறி தென்பட்டால் இந்த வைத்தீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து ரோக நிவர்தீஸ்வரரை வழிபட்டு ஏழை மக்களுக்கு நீர்மோர், பானக்கம், குளிர்பானங்கள் தானமாக கொடுத்தால் அம்மை நோய் வராமலேயே தப்பித்து விடலாம். அதுபோல காலரா, மலேரியா போன்ற நோய்களின் தாக்கம் அறிகுறி உள்ளவர்கள் இந்த சித்தரின் ஜீவசமாதியை வழிபட்டால் நோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும்.

vaitheswararan temple siththar samathi