பெருமாளை முழு முதற்கடவுளாக வழிபடுபவர்கள் வைணவர்கள். வைணவர்கள் எப்போதும் தங்களை முற்போக்கு சிந்தனையாளர்களாக நினைத்துக் கொள்வார்கள். அவர்களை பொறுத்தவரை சூரியன் என்பது கிரகம் கிடையாது. நாம் கண்களால் பார்க்கக்கூடிய ஒரு விண்மீன் என்று நினைப்பார்கள். நிலவு என்பதும் ஒரு கிரகம் கிடையாது, அது ஒரு துணைக்கோள் என்று அவர்கள் சொல்வார்கள்.
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்ற கோள்களை வெறும் கண்ணாலேயே தொலைநோக்கி கொண்டு பார்த்துவிட முடியும். அப்புறம் எதுக்கு தனியாக அந்த கோள்களுக்கு சன்னதி கட்டி வழிபட வேண்டும் என்று வைணவர்கள் நினைக்கிறார்கள்.
விவரம் தெரிந்த வைணவர்கள் ஜாதகம் கூட பார்க்கமாட்டார்கள். வரன் பொருத்தம், கல்வி தகுதி, குடும்ப பின்னணி, வளர்ப்பு இதை மட்டும்தான் திருமண நேரங்களில் பார்ப்பார்கள். விஷ்ணுவை தவிர வேறு எந்த தெய்வத்தையும் வழிபடமாட்டார்கள். அதேபோல திருப்பதி பெருமாள் கோவிலில் கூட நவகிரகங்களை நம்மால் பார்க்க முடியாது. அதேபோல நாட்டுப்புற தெய்வங்களின் கோவில்களுக்கும் வைணவர்கள் எப்போதும் செல்லமாட்டார்கள்.