மக்கள் எல்லோரும் ஆலயத்திற்கு செல்வது கடவுளை வழிபட வேண்டும் என்பதற்காகத்தான். ஆலயத்திற்கு சென்று கடவுளை வேண்டி வணங்கினால் தான் நம்முடைய பிரச்சனைகள் நம்மை விட்டு அகலும். இது தான் எல்லா கோவிலிலும் நடக்கும் விதிமுறை. ஆனால் நம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

அங்குள்ளட தெய்வத்தை மனதில் நினைத்து மூன்று முறை அந்த ஊரின் பெயரை சொன்னால் போதும், நம் வேண்டுதல் நிறைவேறிவிடும் அதிசயம் நடக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் வழியில் வாஞ்சியம் அமைந்துள்ளது. வாஞ்சியம், வாஞ்சியம், வாஞ்சியம் என்று மூன்று முறை சொல்லி வேண்டிக்கொண்டால் போதும், அங்குள்ள ஈசனை வழிபட்ட பலன்கள் நம்மை வந்துசேரும்.

மறுஜென்மம் வேண்டாம் என்று நினைப்பவர்கள், முக்தி கிடைக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் வாஞ்சியம் வந்து இங்குள்ள புனித நீரில் நீராடி எமதர்மனுக்கு என்று இருக்கும் தனி சன்னதியில் எமதர்மனை வழிபட்டுவிட்டு பின்னர் மங்களாம்பிகா சமேத வாஞ்சிநாதரை வழிபட வேண்டும். இதன் மூலம் நமக்கு மறுஜென்மம் இருக்காது, முக்தியும் கிடைத்துவிடும். காசிக்கு சென்றால் எந்த அளவுக்கு புண்ணியம் நமக்கு கிடைக்குமோ அதே அளவு புண்ணியம் இந்த வாஞ்சியத்திற்கு சென்றாலும் நமக்கு கிடைக்கும்.
