இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்கார கடவுள் என்றால் அது திருப்பதி ஏழுமலையான் மட்டுமே. பெருமாளை ஒருமுறையாவது வழிபட வேண்டும் என்று நிறைய பக்தர்கள் ஏங்கிக் கிடக்கிறார்கள். புரட்டாசி மாசம் என்றால் அந்த நாட்களில் பெருமாளை வழிபட பக்தர்கள் திருப்பதிக்கு அதிக அளவில் கூடுவார்கள். திருப்பதி என்றால் வெறும் பெருமாள் மட்டுமே பேமஸ் என்று நினைக்க வேண்டாம், நமக்கே தெரியாத பல ரகசியங்கள் அந்த திருப்பதியில் ஒளிந்துள்ளன.
திருப்பதியில் பெருமாளுக்காக சாத்தப்படும் பூ, பழம், நெய், அபிஷேகப் பால், துளசி இலை போன்ற பொருட்களை பிரத்யோகமாக ஒரு கிராமத்தில் தயார் செய்கிறார்கள். அந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு திருப்பதி பெருமாளுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது தான் வேலை. திருப்பதியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்குள் வேறு மக்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே இங்கு சென்று பெருமாளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவார்கள்.
பெருமாளின் சிலையின் பின்புறத்தில் உள்ள சுவற்றில் காதை வைத்துக் கேட்டால் கடல் அலை சத்தம் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் என்பதை குறிப்பதற்காகவே அந்த சத்தம் கேட்கிறது என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கருவறையில் உள்ள மண் விளக்குகள் இதுவரை ஒருபோதும் அணைந்ததில்லை.
இந்த விளக்குகள் எப்போது ஏற்றப்பட்டது என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனால் இதுநாள் வரை அந்த விளக்குகள் ஒருபோதும் அணைந்ததில்லை. 19ஆம் நூற்றாண்டுக்கு முன்பு திருப்பதியை ஆட்சி செய்த ஒரு மன்னன் தவறு செய்த கைதிகளுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார். இறந்த அந்த கைதிகளின் உடலை திருப்பதி ஏழுமலையான் சன்னதியின் சுவற்றில் தொங்கவிட்டுள்ளார்.
இந்த கொடுமையை பொறுக்க முடியாமல் பெருமாளே நேரில் தோன்றினார் என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. திருப்பதி பெருமாளின் சிலைக்கு பின்னல் இருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். எதனால் நீர் இப்படி சொட்டுகிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தினமும் இங்கு வேலை செய்யும் சில அர்ச்சகர்கள் இந்த நீரை துடைப்பதையே வேலையாக வைத்துள்ளனர்.