தெய்வீகம்

ஒரே நாளில் இந்த மூன்று கோவிலில் உள்ள நரசிம்மரையும் வழிபட்டால் வாழ்வின் எல்லா பிரச்சனையும் தீர்ந்துவிடுமாம்!

Feb 27 2022 09:32:00 PM

பக்தர் பிரகலாதனுக்காக மஹாவிஷ்ணு நரசிம்மர் அவதாரம் எடுத்து இந்த பூமிக்கு வந்து இரணியனை வதம் செய்த பிறகு பிரகலாதனுக்காக இந்த பூமியில் பல இடங்களில் நரசிம்மராக மஹாவிஷ்ணு காட்சி தருகிறார். தமிழகத்தில் மொத்தம் 8 நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அந்த எட்டு ஆலயங்களில் மூன்று ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் வாழ்வில் நம்முடைய எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும்.

same-day three narasimmar valipadu

பரிக்கல், பூவரசன்குப்பம், சிங்கிரிக்குடி என்ற மூன்று இடங்களில் அமைந்துள்ள நரசிம்மரை ஒரே நாளில் வழிபட்டால் கடன், குடும்ப பிரச்சனை மற்றும் எல்லா விதமான தோஷ பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் 25 கிலோமீட்டர் தொலைவில் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. பதவி உயர்வு வேண்டுபவர்களுக்கு, பதவி இழந்தவர்களும் இங்கு வந்து வழிபட்டால் அவர்களின் பிரார்த்தனை உடனே நிறைவேறும்.

same-day three narasimmar valipadu

பரிக்கல்லில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் பூவரசன்குப்பம் என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வந்து வழிபட்டால் உடல் சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் தோஷம் சம்மந்தமான தொல்லைகள் சரியாகிவிடும். பூவரசன்குப்பத்தில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் சிங்கிரிக்குடி அமைந்துள்ளது. இங்கு உக்கிரநரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது.

same-day three narasimmar valipadu

இந்த ஆலயத்தில் வந்து உக்கிர நரசிம்மரை வழிபட்டால் திருமணத்தடை மற்றும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரே நாளில் காலை நேரத்தில் பரிக்கல், நண்பகல் நேரத்தில் பூவரசன்குப்பம் மற்றும் மாலை நேரத்தில் சிங்கிரிக்குடி ஆலயத்திற்கு சென்று நரசிம்மரை வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள எல்லாவிதமான பிரச்சனைகளும் தீர்ந்து நிம்மதியாக வாழ வழிவகை கிடைக்கும் என்று எல்லா பக்தர்களாலும் நம்பப்படுகிறது.

same-day three narasimmar valipadu