தெய்வீகம்

எறும்பு வடிவில் தேவர்களும், இந்திரர்களும் சிவபெருமானை வேண்டி தவம் புரிந்த எறும்பீஸ்வரர் ஆலயம்!

Mar 01 2022 05:48:00 PM

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் திருவெறும்பூர் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கு மிகவும் பிரபலமான எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. தாரகாசுரன் என்ற அசுரன் தான் பெற்ற வரத்தின் மூலமாக தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான்.

thiruverumbur erumbeeswarar temple

பின்னர் இந்திர லோகத்துக்கு சென்று அந்த இந்திரனையும் தோற்கடித்து அசுரன் அட்டகாசம் செய்துவந்தான். பிரம்மனே இந்த அசுரனை அழிக்க நாங்கள் என்ன செய்வது என்று இந்திரன் கேட்டார். உடனே தென்கைலாயத்திற்கு சென்று அங்குள்ள ஈசனை வழிபட்டால் சிறுவன் வழியில் தோன்றி சிவபெருமான் உங்களுக்கு அருள் புரிவார் என்று சொன்னார்.

thiruverumbur erumbeeswarar temple

உடனே இந்திரனும், தேவர்களும் திருவெறும்பூருக்கு வந்து சிவனை வேண்டி தவம் புரிந்தார்கள். தாங்கள் தவம் செய்வது அந்த அசுரனுக்கு தெரியக்கூடாது என்று எறும்பு வடிவில் வந்து சிவபெருமானை வேண்டினார்கள். இவர்கள் அனைவரும் எறும்பு வடிவில் இருப்பதால் அவர்கள் செல்வதற்கு ஏதுவான புற்றுமண்ணில் அமர்ந்து சிவபெருமான் இந்த ஆலயத்தில் காட்சி தருகிறார்.

thiruverumbur erumbeeswarar temple

கடைசியில் சிவபெருமான் சிறு குழந்தை வடிவில் தோன்றி அந்த அசுரனை அழித்தார். எறும்பு வடிவில் தேவர்கள் வந்து இந்த ஆலயத்தில் தவம் புரிந்ததால் இங்குள்ள ஈஸ்வரர் எறும்பீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்களும், இந்திரனும் சிவபெருமானை வேண்டி தவம் புரிந்த ஆலயம் தான் இந்த திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம். இருபத்தி ஒன்று ஜென்மங்கலாக நாம் செய்த பாவத்தை போக்கும் புனிதமான பிரம்ம தீர்த்தம் இந்த ஆலயத்தில் உள்ளது.

thiruverumbur erumbeeswarar temple