பொதுவாக காசிக்கு சென்றால் நம்ம செஞ்ச எல்லா பாவத்தையும் கழித்திடலாம், காசியில் தான் நிறைய பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். காசியை விட நிறைய பலன்களை தரக்கூடிய ஆலயம் நம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. ஆமாங்க, நம்ம இப்போ பார்க்கப்போவது திருவெண்காடு கோவிலை பற்றி தான்.
திருவெண்காடு ஆலயத்தில் ருத்ரபாதம் உள்ளது. இந்த ருத்ரபாதத்தை முறைப்படி வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் வழிபட்டால் கூட வெறும் 7 தலைமுறை பாவங்கள் மட்டுமே தீரும். காசியை விட 3 மடங்கு பாவங்களை இந்த திருவெண்காடு ருத்ரபாதம் தீர்க்கும் வல்லமை கொண்டது. திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் சன்னிதானத்தை 17 தீபங்கள் ஏற்றி 17 முறை சுற்றி வந்து வழிபட்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
திருவெண்காட்டில் அமைந்துள்ள புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். திருவெண்காட்டில் அமைந்துள்ள 3 குளத்திலும் நீராடி பிள்ளை இடுக்கி அம்மனை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும். ஸ்வாமி, அம்மன், புதன் மூவரையும் முறையாக பூஜை செய்து வழிபட்டால் குழந்தை பேறு கைகூடும்.