இன்றைய காலத்தில் மனிதர்கள் ஆடம்பரம் என்கிற பேரில் நிறைய கடன் வாங்கி வட்டி கட்ட ஆரம்பிக்கிறார்கள். சிலர் தங்கள் சில தேவைகளுக்காக மட்டும் கடன் வாங்குகிறார்கள். கடன் தொல்லை, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட சரபேஸ்வரரை வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்.

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவில் திருபுவனம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு சரபேஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரர் வீற்றிருக்கிறார். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர், துயர் துடைப்பவர் தான் இந்த சரபேஸ்வரர்.

சூலினி, பிரத்தியங்கிரா என்னும் இரு தேவிகளுடன் சரபேஸ்வரர் காட்சி தருகிறார். 11 விளக்கு ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, தொடர்ந்து 11 வாரங்கள் சரபேஸ்வரரை வழிபட்டு வந்தால் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். ஞாயிற்று கிழமைகளில் ராகுகால வேளையில் சரபேஸ்வரரை வழிபட சிறந்த நேரம் என்று ஆலய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
