தகவல்கள்

திருப்பதி போக முடியாமல் தொடர்ந்து தடங்கல் வந்துகிட்டே இருக்கா? இதை மட்டும் ஒருமுறை செஞ்சு பாருங்க! திருப்பதி போகும் வாய்ப்பு தானாக வந்துசேரும்!

Mar 05 2022 11:29:00 AM

நம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் இஷ்டதெய்வம் என்றால் அது நம்ம திருப்பதி பாலாஜி தான். எப்படியாவது வாழ்க்கையில் ஒருமுறையாவது திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்திட வேண்டும் என்று நிறைய மக்கள் ஏங்கித் தவிக்கிறார்கள். ஆனால் எல்லோரும் நினைத்தால் அந்த ஏழுமலையானை தரிசிக்க முடியாது. அந்த ஏழுமலையானே மனசு வைத்தால் மட்டும் தான் திருப்பதிக்கு செல்ல முடியும்.

thirupathi payanam easy method

சிலருக்கு திருப்பதிக்கு செல்லவேண்டும் என்றால் தொடர்ந்து தடை வந்துகொண்டே இருக்கும். நம்ம என்ன தப்பு பண்ணுனோம், ஏன் இப்படி தடைபட்டுக்கிட்டே இருக்கு என்று புலம்புவார்கள். எளிமையான ஒரு பரிகாரத்தின் மூலம் திருப்பதி செல்லும் பாக்கியத்தை பெற்றுவிடலாம். முதலில் மண்ணால் செய்த ஒரு உண்டியலை வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த உண்டியலில் ஒரு நாமத்தை போட வேண்டும்.

thirupathi payanam easy method

தினமும் அந்த உண்டியலில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு நிரப்ப வேண்டும். அந்த நேரத்தில் எம்பெருமானே நான் திருப்பதிக்கு வந்து உங்களை வழிபடும் பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுங்கள் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். தொடர்ந்து இதேபோல உண்டியலில் காசு போட்டு பெருமாளை வேண்டிக்கொண்டால் கூடிய விரைவில் திருப்பதி செல்லும் பாக்கியம் தானாக அமையும். அப்படி திருப்பதி செல்லும்போது இந்த மண் உண்டியலையும் எடுத்துச் சென்று பெருமாளின் உண்டியலில் இந்த மண் உண்டியலில் உள்ள காசுகளை காணிக்கையாக செலுத்த வேண்டும்.

thirupathi payanam easy method