இன்றைய காலத்து இளைஞர்களின் மிகப்பெரிய கவலை 30 வயசுக்குள் கல்யாணம் பண்ணுவது தான். எல்லோரும் நிறைய கமிட்மென்ட்களை வைத்துக்கொண்டு வயசிலேயே கல்யாணம் பண்ண முடிவதில்லை. வயது போன அப்புறம் பொண்ணு தேடுனா காசு எவ்வளவு வச்சுருந்தாலும் பெண் வீட்டார் பொண்ணு குடுக்க யோசிக்குகிறாங்க.
கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் இடையில் திருமணஞ்சேரி என்னும் ஊரில் ஸ்ரீ கல்யாண சுந்தர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. திருமண தடை, தாமத திருமணம், சரியான வரன் அமையாமை பிரச்சனை உள்ள ஆண்களும், பெண்களும் இந்த கோவிலுக்கு வந்து கல்யாண சுந்தர மூர்த்தியை வழிபட்டு திருமண வரம் பெறுகிறார்கள்.
முதலில் இந்த கோவிலுக்கு வந்து ஸ்ரீ கல்யாண சுந்தர மூர்த்தி மற்றும் பார்வதி தேவிக்கு மாலை சாற்றுகிறார்கள். பின்னர் பூஜை முடிந்த பிறகு அந்த மாலையை தங்கள் கழுத்தில் அணிந்துகொண்டு கோவிலை சுற்றிவருகிறார்கள். பின்னர் இந்த மாலையை தங்கள் வீட்டுக்கு எடுத்து சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள். இந்த பிரார்த்தனை செய்து முடித்து சில நாட்களிலேயே அவர்களுக்கு திருமணம் நடக்கிறது. பின்னர் மீண்டும் அந்த மாலையை அணிந்து இந்த கோவிலுக்கு வந்து கோவிலில் விட்டுவிடுகிறார்கள். நிறைய பேர் திருமணஞ்சேரி கோவிலுக்கு வந்து இந்த மாதிரி திருமண பலன்கள் பெற்றுள்ளார்கள் என்று கோவில் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.