தகவல்கள்

திருமணம் சிலருக்கு தள்ளிப்போவதற்கு காரணம் இதுதான்! எல்லா தப்புக்கும் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்பதே நிதர்சனம்!

Feb 16 2022 10:49:00 AM

மற்ற உயிரினங்களை விட மனிதர்களாக வாழ்வது என்பது ஒரு அதிர்ஷ்டம் தான். அப்படி மனிதர்களாக வாழ்பவர்கள் நிறைய பேர் தங்கள் பிறவியின் அர்த்தம் புரியாமல் சுற்றிக்கொண்டுள்ளனர். ஒரு மனிதனுக்கு திருமணம் நடந்தால் தான் அவனின் வாழ்க்கையில் நிம்மதி பிறக்கும். தான் மனிதப்பிறவியாக பிறந்ததற்கான பலனை அடைய முடியும்.

tirumanam thallipoguthal karuda puranam

எல்லோருக்கும் அடுத்த ஜென்மத்தில் மனிதராக பிறக்கும் பாக்கியம் கிடைக்காது. நாம் இந்த வாழ்க்கையை வாழும் நேரத்தில் செய்யும் நன்மை தீமைகள் தான் நம்முடைய அடுத்த ஜென்மத்தில் என்னவாக நாம் பிறக்க போகிறோம் என்பதை தீர்மானிக்கும். நாம் செய்யும் ஒவ்வொரு தப்புக்கும் கருடபுராணத்தில் அந்த தப்பிற்கான தண்டனை என்ன என்று சொல்லிவைக்கப்பட்டுள்ளது.

tirumanam thallipoguthal karuda puranam

இந்த பூமியில் உள்ள உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து விளைவித்தால் அதன் தண்டனை திருமணம் நடக்காது என்பது தான். கடந்த ஜென்மத்தில் எதோ ஒரு உயிரினத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி இருந்தால் அவர்களுக்கு இந்த ஜென்மத்தில் திருமண தடை ஏற்படுமாம். மீறி திருமணம் நடந்தாலும் குழந்தை பிறப்பு தள்ளிப்போகும், திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் பிரச்சனை வந்துகிட்டே இருக்குமாம். இதெல்லாம் கருடபுராணத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் தான் என்பது கூடுதல் தகவல்.

tirumanam thallipoguthal karuda puranam