மனிதன் நிம்மதியாக வாழ பணம் ஒரு முக்கிய தேவையாக மாறிவிட்டது. எவ்வளவு காசு வந்தாலும் நம் மக்களுக்கு பத்தவே மாட்டேங்குது. இன்னும் நெறைய சம்பாதிக்கணும் என்கிற எண்ணத்தில் கடன் மேல் கடன் வாங்கி விடுகிறார்கள். ஒருகட்டத்தில் நம் வருமானத்தை விட கடன் அதிகமாகி விடுகிறது. கடன் தொல்லையால் இன்றும் எத்தனையோ குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்வதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கு கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண விமோசன லிங்கத்தை வழிபட்டால் நம் கடன் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம். வெறும் விமோசன லிங்கத்தை வழிபட்டால் மட்டும் கடன் தீர்ந்துவிடாது.
கருவறையில் இருக்கும் சாரபரமேஸ்வரையும் சேர்த்து வணங்கினால் மட்டுமே நம்முடைய வழிபாடு நிவர்த்தி அடையும். ஞானவல்லி, பைரவர் என ஆலயத்தில் உள்ள எல்லா தெய்வங்களையும் வணங்கினால் நம் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். கடன் தொல்லை, பிறவிக்கடன்கள் போன்ற எல்லா பிரச்சனைகளும் நீங்க திருச்சேறை செல்வது நல்ல பலனை கொடுக்கும்.