ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மட்டுமே நடந்த சில அதிசயங்கள்!

Mar 10 2022 11:25:00 AM

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது திருச்செந்தூர் முருகன் கோவில். மற்ற முருகனின் படைவீடுகள் எல்லாமே மலை மேல் அமைந்துள்ளன. கடலுக்கு மிக அருகில் அமைந்துள்ள முருகனின் ஒரே படைவீடு இந்த திருச்செந்தூர் ஆலயம் மட்டுமே. கோவிலின் ராஜகோபுரம் கருவறையின் பின்புறமாக மேற்குப்பக்கம் அமைந்துள்ளது.

tiruchendur murugan angileyar slai kadal

வருடத்தின் சில நாட்களில் விழாக்காலங்களில் மட்டும் தான் கோவிலின் ராஜகோபுரத்தை திறந்து வைப்பார்கள். மற்ற எல்லா நாட்களிலும் இந்த ராஜகோபுரம் மூடியே இருக்கும். கோவிலின் கருவறை கடல் மட்டத்தை விட மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. கோவில் கருவறையின் பின்புறத்தில் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ளன. முருகப்பெருமானே இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்ததாக கோவில் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

tiruchendur murugan angileyar slai kadal

கருவறையில் அமைந்துள்ள முருகப்பெருமானின் சிலையானது ஆங்கிலேயர்களால் கடலில் தூக்கி வீசப்பட்டது. பின்னர் முருகப்பெருமானின் வழிகாட்டுதலின்படி அந்த சிலை தேடி எடுக்கப்பட்டு தற்போது வரை நம் அனைவராலும் வணங்கப்பட்டு வருகிறது. கடற்கரைக்கு மிக அருகில் 100 அடி தூரத்தில் வற்றாத நாழிக்கிணறு அமைந்துள்ளதும் ஒரு தனி சிறப்புதான்.

tiruchendur murugan angileyar slai kadal