தெய்வீகம்

சூரிய ஒளி அம்மனின் காலை தொட்டு வணங்குவதை போல காட்சி தரும் அதிசய ஆலயம்!

Jul 01 2022 05:01:00 PM

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மூங்கில்காடு என்னும் இடத்தில் சூடத்தில் அக்கினியாக பிறந்து சூலாயுதமாக தோன்றினால் அம்மன். 150 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அம்மனை தேனி மாவட்டம் தாடிச்சேரி அரண்மனையில் பிரதிஷ்டை செய்து அங்கு வாழ்ந்த மக்கள் வழிபட தொடங்கினார்கள்.

theni moorthinayakkanpatti temple

பின்னர் சில நாட்களில் அந்த ஊரில் ஏற்பட்ட இயற்கை சீற்றம் காரணமாக பசி, பஞ்சம், காலரா நோய் ஏற்பட்டு நிறைய பேர் இறந்துவிட்டனர். இந்த நிகழ்வில் தப்பித்த சிலர் தேனி மாவட்டம் மூர்த்திநாயக்கன்பட்டிக்கு இடம்பெயர்ந்தனர். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அந்த அரண்மனைக்கு வந்து அந்த அம்மனின் பிடி மண்ணை எடுத்து வந்து தேனி மாவட்டம் மூர்த்திநாயக்கன்பட்டியில் சிறு கோவில் ஒன்றை கட்டினார்கள்.

theni moorthinayakkanpatti temple

100 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இந்த அம்மன் சன்னதியில் ராஜகோபுரம் எழுப்பினார்கள். ராஜகோபுரம் எழுப்பிய பிறகு சூரிய ஒளி நேரடியாக அம்மனின் பாதத்தில் விழும் அதிசயம் இந்த ஆலயத்தில் நடக்கிறது. எதனால் இப்படி ஒரு அதிசயம் நிகழ்கிறது என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

theni moorthinayakkanpatti temple