நண்பர் ஒருவரின் குடும்பம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். நண்பர் கடந்த பல மாதங்களாக நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தார். அப்போது அவரின் மனைவி பெருமாளிடம் கடவுளே என் கணவரை மட்டும் சரி செய்துவிடுங்கள், நான் என்னுடைய தாலியை திருப்பதி உண்டியலில் காணிக்கையாக போடுகிறேன் எண்டு வேண்டிக்கொண்டார்.
சில மாதங்களிலேயே நண்பர் உடல்நலம் தேறிவிட்டார். உடனே அவருடைய மனைவி திருப்பதிக்கு சென்று தன்னுடைய தாலியை உண்டியலில் காணிக்கையாக செலுத்திவிட்டார். இந்த சம்பவம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்ட பெரியவர் ஒருவரிடம் பேசினோம். அப்போது அவர் சொன்ன விஷயங்கள் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எந்த காரணத்தை கொண்டும் திருமணமான பெண்கள் தங்களின் தாலியை கழட்ட கூடாதாம். மாங்கல்ய தோஷமே இருந்தாலும் கணவர் உயிரோடு இருக்கும் வரை தாலியை கழட்டக்கூடாது. அந்த ஆண்டவன் தாலியை கொடு என்று நம்மிடம் கேட்கமாட்டார். எனவே இனிமேல் இதுபோன்ற காணிக்கைகள் செலுத்துவதாக ஆண்டவனிடம் வேண்டிக்கொள்ள வேண்டாம் என்று அந்த பெரியவர் தெரிவித்தார். ஏற்கனவே இதுபோல வேண்டியிருந்தால் அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிடுங்கள்.
நகரத்தில் நாகரீகமாக வாழும் பெண்கள் நிறைய பேர் தாலி அணிவதில்லை. சிலர் இரவு தூங்கும்போது தாலியை கழட்டி வைத்து விட்டு தூங்குவார்கள். இதுபோன்ற செயல்களை பெண்கள் எப்போதும் கடைபிடிக்கக்கூடாது. தாலி கட்டிய கணவர் உயிரோடு இருக்கும் வரை பெண்கள் அந்த தாலியை கழட்டக்கூடாது என்று அந்த பெரியவர் எங்களிடம் சொன்னார்.