பெண்கள் கடவுளின் மீது அதிக அளவில் ஆன்மீக சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். கணவனே கண் கண்டா தெய்வம் என்று நினைக்கும் அளவிற்கு பெண்கள் அதீத ஆன்மீக ஆர்வம் கொண்டுள்ளார்கள். பெண்கள் எப்போதும் தாங்கள் கட்டி இருக்கும் தாலியை கழட்ட மாட்டார்கள். பெண்கள் தங்கள் தாலிக் கயிறை தங்களின் இஷ்டத்துக்கு ஏற்றமாதிரி மாற்றக்கூடாது.
எல்லாத்துக்கும் ஒரு நேரம், காலம் இருக்கு. திருமாங்கல்யத்தை சிலர் தங்கத்திலும், மஞ்சள் கயிற்றிலும் அணிகிறார்கள். இந்த தாலியை பெண்கள் வருடத்திற்கு இரண்டு முறை வரை மாற்றலாம். ஆடிப்பெருக்கின் போது பொதுவாக எல்லா பெண்களும் தாலிக்கயிற்றை மாற்றுவார்கள். தாலிக்கயிற்றை சந்திர தரிசனம், சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த யோகம் இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்துவரக்கூடிய தினத்தில் தான் மாற்ற வேண்டும்.
முக்கியமாக கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும். திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற தினங்களில் தாலிக்கயிற்றை மாற்றலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் கிழக்கு நோக்கி அமர்ந்து தாலிக்கயிற்றை மாற்ற வேண்டும். அந்த நேரத்தில் கணவர், சுமங்கலியான தாய் அல்லது மாமியார் உடன் இருப்பது நல்லது.
வேறு யாரும் தாலிக்கயிற்றை மாற்றும் நேரத்தில் உடன் இருக்கக்கூடாது. உங்கள் வீட்டுக்கு அருகில் ஏதாவது ஒரு கோவில் இருந்தால் அந்த கோவிலில் சென்று தாலிக்கயிற்றை மாற்றினாலும் நல்ல பலன் கிடைக்கும். மாற்றிய பழைய தாலிக்கயிறை அருகில் உள்ள கோவிலில் உள்ள மரத்தில் கட்டித்தொங்க விடவேண்டும். குப்பை தொட்டியில் பழைய தாலிக்கயிறை தூக்கி வீசக்கூடாது.