தத்வமஸி

கிரகண நேரத்தில் கோவிலை மூடுவதற்கு காரணம் என்ன? கிரகண நேரத்தில் இந்த ஒரு ஆலயம் மட்டும் தான் திறந்திருக்குமாம்!

Jun 21 2022 04:11:00 PM

பொதுவாக கிரகண நேரத்தில் சூரியனை பார்க்கக்கூடாது, கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லக்கூடாது, சாப்பிடக்கூடாது என்று பல விதிமுறைகள் நம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கிரகண நேரத்தில் கோவில்களில் எந்த பூஜையும் செய்ய மாட்டார்கள். கோவில் நடைகளை கூட சாத்திவிடுவார்கள். கடவுளே கிரகண நேரத்தில் பக்தர்களை பார்ப்பதற்கு பயப்படுகிறார் என்றெல்லாம் நாத்திக வாதிகள் கிண்டல் செய்வார்கள்.

kiragana neram temple open

கோவில் உள்ள தெருவில் யாரேனும் இறந்துவிட்டால் அன்றைய நாள் முழுக்க பிணத்தை அங்கிருந்து எடுக்கும் வரை கோவிலை திறக்க மாட்டார்கள். சாமிக்கு பூஜையும் செய்யமாட்டார்கள். சாமியே ஆவியை பாத்து பயந்துட்டார் என்றெல்லாம் நாத்திகவாதிகள் சொல்வார்கள். எல்லாத்துக்கும் காரணம் இருக்கு.

kiragana neram temple open

கிரகண நேரத்தில் சூரிய ஒளி மறைக்கப்பட்டுருப்பதால் அந்த நேரத்தில் கோவிலில் பூஜைகள் செய்யக்கூடாது மற்றும் கோவிலை திறக்கக்கூடாது, இறப்பு நடந்த தெருவில் கோவிலில் பூஜைகள் மற்றும் கோவிலை திறக்கக்கூடாது என்று ஆகம விதிகளில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் கோவிலை கிரகண நேரத்தில் திறக்க மாட்டேங்குறாங்க. மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை. கிரகண நேரத்தில் காளகஸ்தி கோவில் மட்டுமே திறந்திருக்கும் என்பது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழிமுறை.

kiragana neram temple open