பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரை வணங்கினால் நம்முடைய பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் நம்மிடம் வந்து சேரும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை போன்ற பிரார்த்தனைகளை செய்தால் பெருமாளின் முழு அருளையும் பெறமுடியும்.

புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபட்டால் நம்முடைய சகல தோஷங்களும் நீங்கி விடும். சகல சௌபாக்கியங்களும் நமக்கு கிடைக்க புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும். புரட்டாசி மாதம் பெருமாளை நினைத்து வழிபட்டு புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவிந்தா கோவிந்தா என்கிற பெருமாளின் நாமத்தை துதிக்க வேண்டும்.

பெருமாளுக்கு உரிய திருமநாமங்களை இட்டுக்கொண்டு சனிக்கிழமை மஞ்சள் ஆடை அணிந்து பெருமாள் சன்னதிக்கு செல்ல வேண்டும். திருப்பதிக்கு புரட்டாசி மாதத்தில் சென்று வருவது நமக்கு நலல பலனை கொடுக்கும். புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்காக அசைவம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். புரட்டாசி சனிக்கிழமை நம்மால் முடிந்த அளவு நம்முடைய வீட்டிலேயே பெருமாளுக்காக படையல் போட்டு பூஜை செய்ய வேண்டும்.
