திருமணமான பெண்கள் எதாவது விசேஷ நாட்கள் என்றால் அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வருவாங்க. அந்த மாதிரி அம்மா வீட்டுக்கு போகும்போது பெண்களின் அம்மா அவங்களுக்கு பாசமா எதாவது சில பொருட்களை கொடுத்து அனுப்புவாங்க. அப்படி அம்மா கொடுத்து விடுகிற எல்லா பொருட்களையும் புகுந்த வீட்டுக்கு கொண்டுவரக்கூடாது.

புகுந்த வீட்டில் விளக்கேற்றி பெண்கள் புகுந்த வீட்டுக்கு ஒளியை கொடுக்கிறார்கள். அந்த விளக்குக்கு ஒளியை கொடுக்கிற எண்ணைய்யை யாரிடம் இருந்தும் இரவலாக வாங்கக்கூடாது. அதுவும் பிறந்த வீட்டில் இருந்து விளக்கு ஏற்றும் எண்ணெய்யை எப்போதும் எடுத்துவரக்கூடாது. தண்ணீரில் கரையக்கூடிய உப்பை தாய் வீட்டில் இருந்து பெண்கள் தங்கள் புகுந்த வீட்டிற்கு கொண்டுவரக்கூடாது.

சீகைக்காய் கொண்டுவந்தாலும் உறவு விட்டுப்போகும் என்று சொல்லுவார்கள், எனவே சீகைக்காய், எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை பெண்கள் எப்பவும் பிறந்த வீட்டில் இருந்து வாங்கி வரக்கூடாது. அதையும் மீறி கொண்டு வரக்கூடிய சூழ்நிலை உருவானால் ஒரு ரூபாய் நாணயத்தை தாய் வீட்டில் கொடுத்துவிட்டு அந்த பொருட்களை கொண்டுவரலாம்.
