சிலருக்கு செய்யும் வேளையில் எவ்வளவு தான் ஈடுபாடு இருந்தாலும் அவர்களின் வேலைக்கு உண்டான பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பதில்லை. நல்லா வேலை பார்த்த சிலரின் வேலையும் திடீரென பறிபோகும் நிலையும் சிலருக்கு இங்கே நடக்கிறது. இந்த மாதிரியான பிரச்சனையை சந்திப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டால் அவர்களின் பிரச்சனை உடனே தீர்ந்துவிடுமாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் பரிக்கல் என்னும் இடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த நிறைய மக்கள் இந்த கோவிலை குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். பதவி உயர்வு, இழந்த பதவியை பெற விரும்புபவர்கள், நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள வேலை கிடைக்க வேண்டும் என்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பலன் பெற்று செல்கிறார்கள்.
திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரசிம்மருக்கு நெய் விளக்கு ஏற்றி பலன் பெற்று செல்கிறார்கள். இங்குள்ள ஆஞ்சநேயர் சிலையின் முன்பு நெல் கொட்டி அந்த நெல்லில் தங்களின் வேண்டுதலை எழுதிவிட்டு சென்றால் பெருமாள் உடனடியாக அருள்புரிவார் என்றும் கோவில் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.