முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதன்மையாக விளங்குவது பழனி. கருவறையில் உள்ள நவபாஷண சிலையால் செய்த முருகப்பெருமான் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். முருகப்பெருமானின் அடியாரான பாம்பன் ஸ்வாமிகள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இந்த உலகில் உள்ள எல்லா முருகன் கோவிலுக்கும் சென்று முருகரை வழிபட்டார்.
ஆனால் கடைசி வரை அவருடைய உடலை விட்டு உயிர் பிரியும் வரை அவரால் பழனி மலை முருகரை வழிபடும் பாக்கியம் கிடைக்கவே இல்லை. பழனிமலை முருகன் சிலையின் மீது இரவு நேரத்தில் சந்தனக்காப்பு இட்டு அபிஷேகம் செய்து அதிகாலையில் அந்த சந்தனக்காப்பு கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. பழனிமலை முருகன் கோவிலில் மட்டுமே இந்த விசேஷமான சம்பவம் நடக்கிறது. எனவே அதிகாலை நேரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், கூட்டம் அலைமோதும்.
முருகப்பெருமானின் காவலாளியாக அகத்தியரின் சீடரான இடும்பன் நியமிக்கப்பட்டார். இந்த இடும்பனுக்காகவே இங்கு தனியாக சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. காவடி தூக்கி வந்து முருகரை வழிபடுவதும் முருகனை வழிபடும் முறைகளில் ஒன்று தான். இந்த காவடி தூக்கும் முறை பழனியில் தான் ஆரம்பமானது. அதிகாலை பூஜை முதல் இரவு நேர பூஜை வரை கருவறை சாத்தப்படாத முருகப்பெருமானின் ஆலயங்களில் பழனி மலை கருவறையும் ஒன்று.
சபரிமலை, குருவாயூர் தலங்களுக்கு மாலை போட்டு செல்லும் பத்தர்கள் பழனிமலைக்கு வந்து முருகரை வழிபட்டு சென்றால் தான் அவர்களின் யாத்திரை நிறைவடையும். வேறு எந்த முருகர் கோவிலுக்கும் இதுபோன்ற ஒரு தனி சிறப்பு கிடையாது. இஸ்லாமியர்கள் பழனி மலை முருகன் கோவிலுக்கு பின்புறம் சென்று சந்தனக் காப்பிட்டு தூபம் காட்டி பாத்தியா ஓதிவிட்டு செல்வதாக சொல்லப்படுகிறது. வேறு எந்த முருகன் கோவிலுக்கும் இஸ்லாமியர்கள் வந்து இதுபோல வழிபாடு செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.