திருநெல்வேலி மாவட்டத்தில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல இல்லாமல் இந்த ஆலயங்கள் சில கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும். நாம் நினைப்பதை போல ஒரே நாளில் சென்று பார்த்திவிட்டு தரிசனம் செய்வது என்பது அவ்வளவு எளிது கிடையாது.

சிலர் டூர் பேக்கேஜ் புக் செய்து செல்கிறார்கள். இந்த நவதிருப்பதி கோவில் அனைத்தும் எல்லா நேரங்களிலும் திறந்திருக்காது. பாதி நேரம் பூட்டித்தான் இருக்கும். ஒன்னு அல்லது ரெண்டு பேர் போய் கோவிலை திறந்துவிடுங்கள் என்று சொன்னால் திறக்கமாட்டார்கள். 10 அல்லது 20 பேருக்கு மேல் சென்றால் தான் நவதிருப்பதி ஆலயங்களை திறப்பார்கள்.

சில ஆலயங்கள் மாலை மூடிவிடுவார்கள். வைகுண்ட ஏகாதசி நாட்களில் ஒரே நாளில் நவதிருப்பதி ஆலயங்களில் வழிபாடு செய்துவிட முடியும். அதிகாலையில் சொந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றால் மதியத்திற்குள் நவதிருப்பதி ஆலயங்களில் எளிமையாக தரிசனம் செய்துவிட முடியும். அதேபோல மார்கழி மாதத்தில் காலை முதல் இரவு வரை எல்லா ஆலயங்களும் திறந்திருக்கும். அந்த நேரத்தில் நவதிருப்பதி ஆலயங்களுக்கு சென்றால் திருப்தியான தரிசனத்தை பெறமுடியும்.
