மற்ற தெய்வங்களுக்கான ஆலயங்களை விட ஆஞ்சநேயருக்கு நம் நாட்டில் சில இடங்களில் மட்டுமே ஆலயங்கள் உள்ளது. அந்த ஆலயங்களும் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தை பற்றி இங்கு பார்க்கலாம். ஆஞ்சநேயர் ஜெயந்தி, அம்மாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிறு தினங்களில் இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயரை வழிபட கூட்டம் அலைமோதும்.
சனி தோஷத்தால் பாதிக்கப்ட்டவர்கள் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். சனி ஓரையில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். வாழ்க்கையில் பொருளாதாரம் மேம்பட, வீட்டில் செல்வம் செழிக்க, தங்கம், வைரம், வைடூரியம் வீட்டில் பெருக ஆஞ்சிநேயருக்கு தங்கமுலாம் பூசிய கவசத்தை பக்தர்கள் காணிக்கையாக அணுவிக்கிறார்கள். இதன் மூலம் வீட்டில் செல்வம் செழிக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிடைக்க வெற்றிலை மாலை சாத்தினால் தடைபட்ட காரியங்கள் உடனே கைகூடும். எந்தவிதமான அலங்காரமும் இல்லாத நேரத்தில் ஆஞ்சிநேயரை தரிசித்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் விலகும். நவகிரக தோஷம் உள்ளவர்கள் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க குவிந்த வண்ணம் உள்ளனர். காரணம் நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு சமம் என்றும் சொல்கிறார்கள்.