தத்வமஸி

பூலோக சொர்க்கம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? ஒரு முறை இந்த ஏரியில் குளித்தால் எல்லா நோய்களும் பறந்துவிடும்!

Mar 10 2022 03:28:00 PM

இமயமலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். பார்க்க இரண்டு கண்கள் பத்தாது. அவ்வளவு அழகாக காட்சி அளிக்கும். இது ஒரு நன்னீர் ஏரி. அந்த இயமலையின் உச்சியில் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும். இந்த மானசரோவர் ஏரியை பூலோக சொர்க்கம் என்று கூட சொல்லலாம்.

manasarovar lake himalaya

பல லோகங்களில் இருந்தும் நம்முடைய சிந்தனைக்கு எட்டாத பல லட்சக்கணக்கான உயிரினங்கள் இந்த ஏரிக்கு வந்து செல்வதாக இங்கு செல்லும் பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த ஏரி பிராணசக்தியை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு எப்போதும் மனதுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்.

manasarovar lake himalaya

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் யாத்திரை செல்லும் நேரத்தில் நமக்கு ஜலதோஷமோ, வேறு எந்த மாதிரியான உடல்நலக்கோளாறுகளோ ஏற்பட்டு விடக்கூடாது என்று பக்தர்கள் பயப்படுவார்கள். அந்த மாதிரி எதாவது நிகழ்ந்தால் யாத்திரையை தொடர்வது சிரமம். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்த பிறகு ஏதாவது உடல்நிலை சரியில்லாமல் போனால் பயணத்தை தொடர்வது என்பது சிரமம்.

manasarovar lake himalaya

வாழ்க்கையில் மீண்டும் அந்த இடத்திற்கு செல்வது என்பது ரொம்ப கஷ்டம். அந்த அளவிற்கு பணம் செலவாகும். அந்த பயத்திலேயே சிலருக்கு ஜலதோஷம் பிடித்துவிடும். இந்த நடுங்கும் குளிரில் இங்குள்ள பனி படர்ந்த சூழ்நிலையில் ஏரியில் குளிக்கலாமா வேண்டாமா என்றெல்லாம் கூட மக்கள் நினைப்பார்கள். ஆனால் ஏரியில் குளித்து முடித்த அடுத்த நிமிடமே அந்த அற்புதம் நிகழும். நம் உடலில் உள்ள எல்லா விதமான நோய்களும் நீங்கிவிடும். இதெற்கெல்லாம் அந்த மானசரோவர் ஏரியில் உள்ள பிராண சக்தியின் மகிமை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

manasarovar lake himalaya