விழுப்புரம் மாவட்டத்தில் மயில் வடிவில் ஒரு மலை அமைந்துள்ளது. இந்த மலையில் முருகப்பெருமான் வள்ளிதெய்வானையோடு காட்சி தருகிறார். சூரபத்மன் முருகப்பெருமானை வழிபட்ட திருத்தலமும் இதுதான். இந்த இடத்தின் பெயர் மயிலம். தேவர்களை துன்புறுத்தியதன் காரணமாக முருகப்பெருமானுக்கும், சூரபத்மனுக்கும் போர் மூண்டது.
அந்த போரில் முருகப்பெருமான் வெற்றிபெற்று சூரபத்மனை ஆட்கொண்டார். முருகப்பெருமானின் கொண்ட பற்று காரணமாக இந்த மயிலம் பகுதிக்கு வந்து சூரபத்மன் தவம் செய்தார். அந்த தவத்தின் பலனாக சூரபத்மன் மயில் வடிவிலான பாறையாக மாறினார். முருகப்பெருமான் சூரபத்மன் மீது வந்து அமர்ந்து இந்த மயிலம் பகுதியில் காட்சி அளிக்கிறார் என்று கோவில் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.
சூரபத்மன் வடக்கு நோக்கி அமர்ந்து தவம் புரிந்தார். இந்த மலையில் முருகப்பெருமானும் வடக்கு நோக்கி மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த மயிலம் மலையே ஒரு மயிலைப்போல காட்சி அளிக்கிறது. இந்த மயிலம் மலையில் நொச்சி மரங்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே முதலில் நொச்சி மாலை செய்து முருகப்பெருமானுக்கு அணுவிக்கிறார்கள்.
அதன் பிறகு தான் மற்ற மலர்களில் செய்த மாலையை முருகனுக்கு அனுவிப்பார்கள். காலை நேர பூஜையின் போது வெள்ளிக்காப்பும், மாலை நேரபூஜையின் போது தங்கக்காப்பும் முருகப்பெருமானுக்கு அணுவிக்கிறார்கள். இந்த கோவில் எப்போதும் அமைதியாக இருக்கும். மனஅமைதி வேண்டும் என்று நினைப்பவர்களும், பணப்பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுபவர்களும் மயிலம் வந்து முருகப்பெருமானை தரிசித்து பலன் பெறுகிறார்கள்.