தத்வமஸி

மஹாசிவராத்திரி அன்று தப்பித்தவறி இந்த விஷயங்களை மட்டும் செய்யவே கூடாது!

Mar 14 2022 05:50:00 PM

சிவபெருமான் இந்த பூலோகத்தை காப்பதற்காக விஷத்தை உண்ட தினமே இந்த மஹாசிவராத்திரி. எனவே சிவபெருமானின் உடல் அன்றைய தினத்தில் மிகுந்த வெப்பத்தில் இருக்கும். முடிந்தவரை சிவராத்திரி அன்று பால், தயிர், நெய், தேன் போன்ற பொருட்களை வாங்கிச் சென்று சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது நல்ல பலனை கொடுக்கும்.

siva rathiri sivaperuman valipadum muraikal

சிவபெருமான் அகால விஷயத்தை உண்டதால் அவருடைய உடலின் வெப்பத்தை குறைப்பதற்காக மேற்க்கண்ட பொருட்களை கொண்டு சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். சிவவழிபாட்டில் குங்குமத்தை பயன்படுத்தவே கூடாது. சிவப்பு மலர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவை. எனவே சிவப்பு மலர்கள் கொண்டு சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்யக்கூடாது.

siva rathiri sivaperuman valipadum muraikal

சிவராத்திரி அன்று துளசி இலைகளை சிவபெருமானுக்கு பூஜை செய்ய பயன்படுத்தக்கூடாது. சிவபெருமான் எப்போதும் அமைதியானவர். எனவே சிவராத்திரி அன்று மிகவும் அமைதியான முறையில் சிவனை வழிபட வேண்டும். உடைந்த அரிசியை கொண்டு சிவனுக்கு பூஜை செய்யக்கூடாது. சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடும் நேரத்தில் நல்ல தூய்மையான அரிசியை வைத்து பூஜை செய்யவேண்டும்.

siva rathiri sivaperuman valipadum muraikal