தெய்வீகம்

பொய் சத்தியம் செய்தவர்கள் காளியின் எல்லையை தாண்டுவதற்குள் தண்டிக்கப்படும் அதிசயம் நடக்கும் திருத்தலம்!

Jun 21 2022 05:29:00 PM

தமிழ்நாட்டில் உள்ள சில கிராமங்களில் அந்த ஊர் மக்களை பாதுகாக்கும் காளி அம்மன் கோவில்களும், மலையாள சாமி கோவில்களும் அந்த ஊரின் எல்லையில் அமைந்திருக்கும். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு மிக அருகில் மடப்புரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இந்த ஊரின் எல்லையில் வைகை ஆற்றங்கரையில் ஆக்ரோஷமாக பத்ரகாளி அருள்புரிகிறார்.

madappuram kaali temple

நினைத்த காரியம் உடனே நிறைவேற காளிக்கு எதிர்புறம் உள்ள மண்டபத்தில் நெய் தீபம் ஏற்றிவழிபட வேண்டும். எலுமிச்சம்பழம் தான் காளிக்கு ரொம்ப பிடித்த காணிக்கை. காளிக்கு மட்டும் 101 எலுமிச்சம்பழத்தில் மாலை கோர்த்து அணுவிக்கிறார்கள். ஒருவேளை குதிரைக்கும் காளிக்கும் எலுமிச்சம்பழ மாலை அனுவிக்க விரும்புபவர்கள் 1001 எலுமிச்சம்பழ மாலை செய்யவேண்டும்.

madappuram kaali temple

மடப்புறத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் கொடுக்கல், வாங்கல், குடும்ப பிரச்சனை, சொத்து பிரச்சனை இருந்தால் யாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கோ, கோர்ட்டுக்கோ போகமாட்டார்கள். அவங்க நேரா காளி கோவிலுக்கு தான் வருவார்கள். பிரச்சனை உள்ள இரு நபர்கள் நேரடியாக கோவிலுக்கு வந்து காளிக்கு அருகில் உள்ள சத்தியக்கல்லில் சூடம் ஏற்றி நாங்கள் தப்பு செய்யவில்லை என்று சொல்லி சாத்தியம் செய்வார்கள்.

madappuram kaali temple

கழுத்தில் அரளி மாலையை போட்டுக்கொண்டு காளிக்கு வலதுபுறம் உள்ள பூதத்தை கட்டிப்பிடித்து நாங்கள் தப்பு செய்யவில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். ஒருவேளை யாரவது பொய் சத்தியம் செய்தால் 30 நாட்களுக்குள் காளியால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். சில நேரங்களில் அந்த ஊரின் எல்லையை தாண்டுவதற்கு முன்னரே காளி அவர்களுக்கு தண்டனை கொடுத்த சம்பவமும் இங்கு நடந்துள்ளது. பொய் சத்தியம் செய்தவர்கள் மீண்டும் இந்த காளி கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்வதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.

madappuram kaali temple

நம்மை சிலர் வீம்புக்கு என்று எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். அவர்களை நம்மால் தட்டிக்கேட்க கூடிய தைரியம் நம்மிடம் இருக்காது. இந்த காளி சிலைக்கு எதிர்புறம் உள்ள பட்டியக்கல்லில் சுத்தியல் உளி கொண்டு காசு வெட்டிப்போட்டு அந்த நபரை எதிர்க்க என்னிடம் திராணி இல்லை. அவர்களுக்கு நீதான் தண்டனை கொடுக்கணும் என்று காசு வெட்டிப்போட்டு வேண்டிக்கொண்டால் காளி தெய்வம் உடனே அருள்புரிவார் என்றும் சொல்லப்படுகிறது.

madappuram kaali temple

காளி கோவிலுக்கு பின்புறம் தெய்வசக்தி நிறைந்த வேப்பமரம் உள்ளது. திருமண தடை உள்ளவர்கள் இந்த வேப்பமரத்தில் மஞ்சள்கயிற்றில் தாலி கட்டி வழிபட்டால் திருமணத்தடை உடனே நீங்கும் என்றும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இந்த காளி கோவிலில் உள்ள வேப்பமரத்தில் முந்தானையை கிழித்து தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் உடனே கைகூடும் என்றும் இங்குள்ள மக்களால் சொல்லப்படுகிறது.

madappuram kaali temple