திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியில் இரையாற்று மங்கலம் என்னும் ஊர் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கும், அய்யன் வாய்க்காலுக்கும் இடையில் இந்த ஊர் அமைந்துள்ளதால் இதனை இடையாற்று மங்கலம் என்று அழைக்கிறார்கள்.

இந்த இரையாற்று மங்கலத்தில் லட்சுமி நாராயணன் திருக்கோவில் அமைந்துள்ளது. லட்சுமி நாராயணன் கிழக்கு நோக்கி அமர்ந்து கருவறையில் காட்சி தருகிறார்.

தாயாரை தனது இடது தொடையில் அமர்த்தி லட்சுமி நாராயணன் காட்சி தருகிறார். கணவன் மனைவிக்கு பிரச்சனை உள்ள தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து லட்சுமி நாராயண பெருமாளை வழிபட்டு சிக்கல் நீங்கி செல்கிறார்கள்.
