ஆன்மீகம்

அர்த்தநாரிஸ்வரர் வடிவில் காட்சி தரும் முருகப்பெருமான்! பழனி மலை முருகப்பெருமானின் சிலையே இந்த முருகரை பார்த்து தான் போகர் சித்தர் வடிவமைத்தாராம்!

Jun 30 2022 05:57:00 PM

தமிழ் நாட்டில் உள்ள மிகவும் பிரபலமான முருகப்பெருமானின் ஆலயங்களில் பழனி மலை முருகன் கோவில் தான் முதல் இடத்தில் இருக்கும். அந்த பழனி மலை முருகரை போகர் சித்தர் தான் வடிவமைத்தார். அந்த சிலையை வடிவமைப்பதற்கு முன்னர் போகர் சித்தர் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள கூவமலைக்கு சென்றிருக்கிறார். அங்குள்ள முருகப்பெருமானை பார்த்த பிறகு அந்த சிலையை அடிப்படையாக வைத்து தான் போகர் சித்தர் பழனி மலை நவபாஷண சிலையை வடிவமைத்தார் என்று கூவைமலை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

kuvai malai kolli adivaram murugan temple

நாமக்கல்லில் இருந்து கொல்லிமலை செல்லும் வழியில் கொல்லிமலை அடிவாரத்தில் இந்த கூவைமலை அமைந்துள்ளது. இங்குள்ள முருகரை நேராக நின்று பார்த்தால் வேடனை போல காட்சி தருவார். வலதுபுறம் நின்று பார்த்தால் ஆண் உருவில் காட்சி தருவார். இடதுபுறம் நின்று பார்த்தால் பெண் உருவில் காட்சி தருவார். ஒரே நேரத்தில் சிவனும், சக்தியாக முருகப்பெருமான் காட்சி அளிப்பதால் முருகப்பெருமானின் இந்த உருவத்தை அர்த்தநாரிஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.

kuvai malai kolli adivaram murugan temple

அர்த்தநாரிஸ்வரர் வடிவில் முருகன் காட்சி அளிப்பதால் இவருக்கு சக்தி அதிகம். கூவை என்றால் கழுகு என்று பொருள். மேலிருந்து இந்த கூவைமலையை பார்த்தால் கழுகு பறப்பதை போல காட்சி அளிக்கும். இந்த கூவைமலையின் அடிவாரத்தில் யானை வடிவில் சுனை ஒன்று உள்ளது. இந்த் சுனையை யானை பாழி தீர்த்தம் என்று சொல்கிறார்கள். வருடம் முழுவதும் இந்த சுனையில் தண்ணீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கும். இந்த தீர்த்தத்தை உடலில் தெளித்துக்கொண்டால் தோல் மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்கள் குணமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

kuvai malai kolli adivaram murugan temple