தத்வமஸி

கோவில் குளத்திலும், ஆற்றிலும் சில்லறை காசை வீசுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

Jun 21 2022 01:45:00 PM

பொதுவாக ஆலயத்துக்கு செல்லும் மக்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் தங்கள் சக்திக்கு முடிந்த பணத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக போடுவார்கள். சிலர் கோவில் குளத்திலும், கோவிலுக்கு மிக அருகில் உள்ள ஆற்றிலும் சில்லறை காசை வீசுவார்கள். ஒரு நாள் அந்த கோவில் குளத்தை சுத்தம் செய்யும்போது இந்த காசை எடுத்து கோவில் நற்பணிக்களுக்காக உபயோகப்படுத்துவார்கள் என்று நினைத்து தான் நிறைய பேர் குளத்திலும், ஆற்றிலும் காசை வீசுகிறார்கள்.

kovil kulam sillarai kaasu

ஆனால் இதுக்கு பின்னாடி ஒரு மிகப்பெரிய அறிவியலே இருக்கு. உண்மை காரணம் இது கிடையாது. பழங்கால மக்கள் செம்பு காசை தான் பயன்படுத்துவார்கள். செம்பு அதிக சக்திகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. கோவில் குளத்திலும், ஆற்றிலும் செம்பு காசை வீசினால் அந்த செம்பு தண்ணீருடன் வினை புரிந்து உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் நீராக மாறும்.

kovil kulam sillarai kaasu

அந்த காலத்தில் கோவில் குளத்தில் இருந்து நீர் எடுத்து தான் மக்கள் குடிப்பதற்காக பயன்படுத்தினார்கள். செம்பு உடலுக்கு குளிர்ச்சி. செம்பு கலந்த அந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும். பழங்காலத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இந்த செம்பு காசு வீசிய குளத்தில் குளித்து அந்த நீரை பருகி ஆண்மை பெற்றதாக வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

kovil kulam sillarai kaasu

இந்த காரணத்துக்காகத்தான் கோவில் குளத்திலும், ஆற்றிலும் செம்பு காசை வீசுகிறார்கள். ஆனால் இந்த காலத்தில் மக்கள் இரும்பு நாணயத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். முடிந்தவரை செம்பு பொருட்களை குளத்திலும், ஆற்றிலும் வீசினால் அதை பருகுபவர்கள் பயன் பெறுவார்கள் என்று என் வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

kovil kulam sillarai kaasu