நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா கொல்லிமலையில் மாசி பெரியண்ண சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கொல்லிமலையை ஏறிய பிறகு இரண்டரை கிலோமீட்டர் கரடுமுரடான பாதையில் சென்ற பிறகு தான் மாசி பெரியண்ண சாமி திருக்கோவிலை அடைய முடியும்.

இந்த கோவிலில் பல வித்யாசமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த கோவிலின் கூரை முழுவதும் வழலால் வேயப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இந்த கோவிலுக்கு வந்து கூறையில் உள்ள வழலையில் முடிச்சு போட்டுவிட்டு சென்றால் திருமண தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்த கோவிலின் முன்பு நிறைய வேல் கம்புகள், சூலம் வைக்கப்பட்டுள்ளது. உங்களிடம் யாராவது பிரச்சனை செய்கிறார் சென்றால், எதிரிகளால் தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் இந்த கோவிலுக்கு வந்து இங்குள்ள வேலில் உயிர் கோழியை காவு கொடுக்க வேண்டும். அந்த கோழி எப்படி துடிதுடித்து சாகிறதோ அதேபோல நம்முடைய எதிரிகளும் அழிந்து போவார்கள் என்பது கோவில் வரலாறு. நமக்கு துரோகம் செய்தவர்களை நினைத்து இந்த கோவிலில் மணிகளையும், மந்திர தகடுகளையும் கட்டினால் மாசி பெரியண்ண சாமி அந்த துரோகிகளுக்கு தண்டனை கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
