இந்த உலகில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கு பின்னாடியும் எதாவது ஒரு காரணம் இருக்கும். இந்த உலகத்தில் கெட்டதுன்னு ஒன்னு நடந்தா அதை சரி பண்ண நல்லது நிச்சயம் பிறக்கும். எல்லா விஷயங்களுக்கு பின்னாடியும் கடவுளின் செயல் நிச்சயம் இருக்கும். கேதார்நாத் கோவில் இந்துக்களின் புனித ஆலயங்களில் ஒன்று. வட மாநிலங்களில் வாழும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த ஆலயத்திற்கு சென்று கேதாரீஸ்வரரை வழிபட வேண்டும் என்று விரும்புவார்கள்.
16-06-2013 அன்று கேதார்நாத்தில் பெருமழை மற்றும் புயலின் தாக்கத்தால் அந்த பகுதியே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. ஏராளமான மக்கள் தங்கள் குடும்பங்களை, உடமைகளை இந்த பேரழிவினால் இழந்துவிட்டார்கள். ஆனால் கேதார்நாத்தில் இருந்த கேதாரரீஸ்வரரின் ஆலயத்திற்கு எதுவுமே ஆகவில்லை. ஒரு மிகப்பெரிய பாறை உருண்டு வந்து கோவிலின் பின்புறம் அணை கட்டியதை போல நின்றுவிட்டது.
தண்ணீரின் வேகத்தை குறைத்து அந்த தண்ணீரை கோவிலுக்குள் போகவிடாமல் தடுத்து கோவிலை இந்த பாறை காப்பாற்றியது. வெள்ளமும் திசை மாறி சென்றுவிட்டது. இந்த பாறை 20 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இந்த பாறையை பீம் ஷீலா என பெயர் வைத்து பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். சிவபெருமானின் அருளால் தான் இந்த பாறை மலையில் இருந்து உருண்டு வந்து கோவிலின் பின்புறம் நின்று கோவிலையும், கோவிலில் இருந்த மக்களையும் காப்பாற்றியதாக மக்கள் நம்புகிறார்கள்.