மற்ற எந்த ஜீவராசிகளாக பிறந்தவர்களும் இந்த அளவு கொடுஞ்செயல்கள் செய்வதில்லை. மனிதர்களாக பிறந்த நாம் தான் எல்லா விதமான பாவங்களையும் செய்துவிட்டு ஒன்னும் தெரியாததை போல அலைவோம். வாழ்க்கையில் நாம் செய்த பாவங்கள் நம்மை சுற்றும் வேளையில் செய்வதறியாது திகைத்து நிற்போம்.

இதனால் வரும் கர்மவினைகள் நம்மை தான் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த கடவுளே தப்பு பண்ணுனாலும் அதற்கான கர்மவினைகளை அனுபவித்து தான் தீர வேண்டும். சில நேரங்களில், சில இடங்களில் மட்டுமே இதற்கான விதிவிலக்கு கடவுளுக்கே கிடைக்கும். தெய்வ அனுகிரகம் இருந்தால் மட்டுமே கர்மவினைகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியும்.

கர்மவினைகள் நீங்க தெய்வத்தை அணுகுவது தான் ஒரே வழி. தான தர்மங்கள் தொடர்ந்து செய்து வருவது, புனித தீர்த்தங்களில் நீராடுவது, புண்ணிய தலங்கள் சென்று தரிசனம் செய்வது, மகான் தரிசனம், பக்தி நூல்களை படிப்பது, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மற்றும் நேர்மையான வாழ்க்கை முறை போன்ற பண்புகள் இருந்தால் மட்டுமே நம்முடைய கர்மவினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
