தகவல்கள்

கண்திருஷ்டியை பத்தி மட்டும் சாதாரணமா நெனச்சுடாதீங்க! கண் திருஷ்டி உள்ளவர்கள் இப்படி செய்தால் எல்லா தோஷமும் பறந்து போய்டுமாம்!

Feb 16 2022 04:05:00 PM

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். கல்லடி பட்ட காயம் கூட சில நாட்களில் காணாமல் போய்விடும். ஆனால் கண் திருஷ்டி பட்டுவிட்டால் அது ஆயுசு முழுக்கவும் ஒரு ஆறாத வடும்பாக மாறிவிடும். கல்லடி பட்ட துன்பம் கூட காற்று போல மறைந்துவிடும், ஆனால் கண்ணடி பட்ட துயரம் எப்போதும் நம்மை விட்டு அகலாமல் துரத்திக்கொண்டே இருக்கும்.

kan thirusti arikaara valipadu

இதுக்குத்தான் நம்ம முன்னோர்கள் சுத்தி போடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்தார்கள். இவன் மட்டும் இவனோட குடும்பத்தோட இவ்வளவு சந்தோசமா இருக்கானே என்று நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பார்த்து பொறாமைப்படும் விஷயம் தான் கண் திருஷ்டி. இப்படி பொறாமை படுவது என்பது மனிதனின் இயல்பான குணங்களில் ஒன்று.

kan thirusti arikaara valipadu

பெண்கள் தங்களை விட அழகான, செல்வம் படைத்த நபர்களை பார்த்து பொறாமை படுவார்கள். ஆண்கள் தங்களை விட பதவியில் உயர்வான, படிப்பில் அதிகமான ஆட்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து பொறாமை கொள்வார்கள். இந்த கண் திருஷ்டியில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பூசணிக்காய் உடைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், உப்பு சுத்தி போடுதல், எலுமிச்சம்பழத்தை நான்காகப் பிழிந்து எறிதல், ஆரத்தி சுற்றுதல், மிளகாய் சுற்றுதல் போன்ற வழக்கங்களை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

kan thirusti arikaara valipadu

இந்த பரிகாரங்களை நாம் வெறும் மூட நம்பிக்கை என்று நினைத்து ஒதுக்கி வைத்துவிட முடியாது. கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள் மேலே சொன்ன பரிகாரங்களை செய்தால் கண் திருஷ்டி உடனடியாக சரியாகிவிடும். வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால் கண் திருஷ்டி தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

kan thirusti arikaara valipadu