முதலில் கண்திருஷ்டி என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். ஒரு சாதாரண வேளையில் இருக்கும் ஒருவர் தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் நபரை பார்த்து பொறாமைப்படுவார்கள். ஒரு ஏழையாக இருக்கும் ஒரு மனிதன் தன்னை விட செல்வந்தவராக இருக்கும் நபரை பார்த்து வாழ்க்கையில் எப்போதும் பொறாமை பட்டுக்கொண்டே இருப்பார். இதுதான் மனிதர்களின் குணம். இந்த பொறாமைப்படும் எண்ணத்தை தான் கண்திருஷ்டி என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர்.
நம்மால் நிகழ்த்தப்படும் ஒரு விஷயத்தை பற்றி பிறர் தெரிந்துகொண்டால் மட்டுமே அவர்கள் நம் மீது பொறாமை படுவார்கள். உதாரணமாக என் வங்கிக்கணக்கில் நான் தினமும் 5000 ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று நாம் ஒருவரிடம் சொல்லும்போதும், நான் தினமும் அசைவ உணவு இல்லாமல் தூங்கமாட்டேன் என்று சொல்லும் போதும் அந்த விஷயங்களை தினமும் செய்யமுடியாமல் ஏங்கித் தவிக்கும் நபர் நம் மீது பொறாமை படுவார்.
எனவே நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் சில்லை. நம்மிடம் உண்மையாக உள்ள உறவுகளுக்கு மட்டும் எல்லா விஷயங்களை சொன்னால் போதுமானது. எல்லோரும் நம்மைப் பற்றிய சில விஷயங்களை அவர்களால் முடியாத சில காரியங்களை தெரிந்துகொண்டால் நம் மீது பொறாமைப்பட்டு நமக்கு கண் திருஷ்டி ஏற்படும். முடிந்தவரை நம் சம்மந்தமான விஷயங்களை மற்றவர்களுக்கு சொல்லாமல் இருந்தால் கண் திருஷ்டியில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம்.