பொதுவாக எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று அழைப்பார்கள். நம் மண்ணின் முக்கிய பழங்களான மா, பலா, வாழை போன்ற பழங்களை விட இந்த எலுமிச்சம்பழம் அதிக தெய்வ சக்திகளை உள்ளடக்கியுள்ளது. தெய்வங்களுக்கு உகந்த பழம் என்பதால் இந்த எலுமிச்சம்பழத்தை தேவகனி என்று நம் மக்கள் அழைக்கிறார்கள்.
எலுமிச்சம்பழத்தை மாலையாக செய்து மாரியம்மன்,பத்ரகாளி போன்ற தெய்வங்களுக்கு அனுவிப்பதால் நாம் நினைத்த காரியம் உடனே கைகூடும் என்பது ஐதீகம். கோவில்களில் கொடுக்கும் எலுமிச்சம்பழத்தை நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ திருஷ்டி சுத்தி போடுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். கோவிலில் அம்மன் காலடியில் வைத்து கொடுத்த தெய்வ சக்தி நிறைந்த அந்த பழத்தை திருஷ்டி சுத்த பயன்படுத்தக்கூடாது.
அந்த பழங்களை நாம் ஜூஸ் போட்டு குடிக்கலாம். ஆனால் அந்த ஜூஸில் சர்க்கரை மற்றும் தேன் மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். கோவிலில் கொடுத்த எலுமிச்சம்பழத்தை உப்பு கலந்து சாப்பிடக்கூடாது. திருஷ்டி சுத்த நாம் கடைகளில் வாங்கும் எலுமிச்சம்பழத்தை தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட கோவிலில் கொடுக்கும் சக்தி வாய்ந்த எலுமிச்சம்பழத்தை பயன்படுத்தலாம்.