பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோவில் அமைந்துள்ளது. சீக்கியர்களின் புனித குருவான குரு ராம் தாஸ் என்பவரால் இந்த கோவில் உருவாக்கப்பட்டு பஞ்சாப்பில் உள்ள அம்ருத்சர் நகரில் இந்த கோவில் அமைந்துள்ளது. பொற்கோவிலை சுற்றி தடாகம் என்னும் நீர்நிலை அமைந்துள்ளது. பொற்கோவிலுக்கு செல்வதற்கு முன்னர் இந்த தடாகத்தில் குளித்து விட்டு செல்வது நல்ல பலனை கொடுக்கும்.

உலகில் உள்ள எல்லா ஜாதி, மதத்தை சேர்ந்த எல்லா விதமான ஆண்களும், பெண்களும் வந்து எந்தவித பாகுபாடும் இன்றி கடவுளை வழிபட வேண்டும் என்பதற்காக இந்த பொற்கோவில் கட்டப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்தால் இந்த தடாகத்தில் குளிக்க முடியாது. இந்த தடாகத்திற்குள் சென்று தலையை மூழ்கிவிட்டு வெளியேறிவிட வேண்டும். நீச்சல் அடிக்கக்கூடாது.

கோவிலுக்குள் நுழையும்போது ஆண்கள் தங்கள் தலையை ஒரு துணியால் கட்டிக்கொள்ள வேண்டும், பெண்கள் தங்கள் புடவை கொண்டு தங்கள் தலையை மூடிக்கொள்ள வேண்டும். காரணம் நம்முடைய தலைமுடி கோவில் வளாகத்திற்குள் உதிரக்கூடாது என்பது ஐதீகம். கோவிலுக்குள் எப்போதும் கிரந்தி எனப்படும் இசை குழுவினர் இசையமைத்து பாடிக்கொண்டே இருப்பார்கள். கோவிலுக்குள் வருபவர்கள் கோவிலுக்குள் தங்கள் தலையை குனிந்து நெற்றியை தரையில் தொட்டு வணங்கிவிட்டு வெளியே செல்வார்கள். நிறைய பேர் கோயிலுக்குள்ளேயே அமர்ந்து இசையை சிறிது நேரம் அனுபவித்து விட்டு வெளியேறுவார்கள்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது கடா ப்ரஸாத் என்னும் நெய்யொழுகும் ரவா கேசரியை பிரசாதமாக கொடுப்பார்கள். அதேபோல கோவிலில் லங்கர் எனப்படும் உணவையும் பிரசாதமாக கொடுப்பார்கள். இந்த லங்கர் உணவு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் நிறைய பேர் பாத்திரங்கள் கழுவி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்வார்கள். கோவிலுக்குள் நுழையும்போது நாம் காலணியை கழட்டி விட்ட இடத்தில் மீண்டும் வந்து பார்க்கும்போது நம்முடைய காலணியை புதுசு போல பாலிஷ் செய்து பளபளக்கும் அளவிற்கு சுத்தம் செய்து கொடுப்பார்கள். உலகில் வேறு எந்த கோவிலிலும் இதுபோன்ற சேவையை நம்மால் பார்க்க முடியாது.
