அம்மனை வழிபட ஆடி மதம் உகந்த மாதம். இந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரத்தில் தான் அம்மன் பிறந்ததாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆடிப்பூரம் தினத்தில் சுமங்கலிப்பெண்களும், திருமணமாகாத பெண்களும் அம்மன் சன்னதியில் கூடுவார்கள்.

அம்மனுக்கு வளையல் வாங்கிச் சென்று அம்மன் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள். இதேபோல பல பெண்கள் ஆடிப்பூரம் தினத்தில் அம்மன் கோவிலுக்கு வளையல் வாங்கிவந்து அம்மன் வழிபாட்டிற்காக கொடுப்பார்கள். இந்த அனைத்து வளையலும் அம்மனின் பூஜையில் வைக்கப்பட்டு பூஜை முடிந்த பிறகு மீண்டும் பெண்களுக்கு பிரசாதமாக இந்த வளையலை கொடுப்பார்கள்.

இந்த வளையலை திருமணம் ஆகாத பெண்கள் வாங்கிக்கொண்டு தங்கள் கைகளில் அணிந்துகொண்டால் மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். கணவர்களின் தீராத நோய் குணமாகிவிடும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இந்த பூஜையில் கலந்துகொண்டு வளையலை அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
