தெய்வீகம்

யாக குண்டத்தில் இருந்து எடுத்த காசை வீட்டில் வைத்திருக்க கூடாதா? இந்த காசுக்கு இப்படியொரு பவர் இருக்கா? சூடு ஆறுவதற்குள் பெண்கள் செய்யும் தவறு!

Jan 09 2022 08:09:00 PM

கும்பாபிஷேக யாக குண்டம் அல்லது கோவில்களில் நடக்கும் சிறப்பு பூஜை யாக குண்டம் போன்றவற்றில் யாகம் முடிந்ததும் ஒரு கூட்டம் எப்போது யாகம் முடியும்? யாக சாலை உள்ளே புகுந்து யாக குண்டத்தில் உள்ள சாம்பல் மற்றும் காசை எப்போது எடுக்கலாம் என காத்து கொண்டிருப்பார்கள்.  பூஜை முடிந்ததும் ஒரு குச்சி வைத்து அந்த சூடான சாம்பலை கலைத்து கொண்டிருப்பார்கள். சில சூடான கங்குகளை கையிலும் போட்டுக்கொள்வார்கள். 

yagna-kundam kumbabishekam
இப்படி உடனடியாக யாக குண்டத்தில் இருந்து காசை எடுப்பது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? யாகம் என்பது யாக குண்டம் வளர்த்து, அக்னி பகவானை அழைத்து, அவருக்கு நெய்வேத்தியமாக அந்த யாக குண்டத்தில் நெய், காசு, சில பட்சணங்களை இடுவார்கள். ஒருவர் உணவு உண்டு கொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவருடைய கையில் உள்ள உணவையோ வாயில் உள்ள உணவையோ அல்லது தட்டில் உள்ள உணவையோ எடுப்பது எவ்வளவு பெரிய பாவம்? 

yagna-kundam kumbabishekam

அதனை போல் தான் சூடான அக்னி குண்டத்தில் இருந்து காசை எடுப்பதும். பசியாறி கொண்டிருக்கும் அக்னி பகவானை உணவு அருந்த விடாமல் செய்வது போன்றாகும். அந்த குண்டத்தில் சூடு இருக்கும்வரை அக்னி பகவான் அதில் உள்ளார் என்று அர்த்தம். அப்படியானல் யாக குண்டத்தில் இருந்து காசை எடுக்க கூடாதா? என்றால் கண்டிப்பாக எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் மாலை வேளையில் யாக குண்ட சூடு முழுவதும் ஆறிய பின்னர், தாராளமாக காசை அதில் இருந்து எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

yagna-kundam kumbabishekam
அப்படி எடுக்கும் காசை பணம் புழங்கும் இடத்தில் வைத்து கொள்ளலாம். கடையாக இருந்தால் கல்லா பெட்டி, வீடாக இருந்தால் பணம் வைக்கும் பெட்டி, பீரோ போன்ற இடங்களில் வைத்து கொள்ளலாம். இப்படி வைப்பதால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கப்பெற்று அந்த வீடு சுபிட்சமாக இருக்கும் என்பது நம்பிக்கை. சிலர் இந்த காசை வீட்டில் வைத்திருக்க கூடாது, உடனே கோவில் உண்டியலில் போட்டுவிட வேண்டும் என்பார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தாராளமாக வைத்திருக்கலாம்.