தகவல்கள்

கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் மனைவி சாப்பிடுவது ஏன் தெரியுமா? அதுவும் திருமணமான புதிதில் இந்த விஷயம் கண்டிப்பா பண்ணணும்!

Oct 20 2021 10:38:00 AM

திருமணம் ஆன புதிதில் மனைவி கணவர் சாப்பிட்ட எச்சில் இலையிலோ அல்லது கணவர் மிச்சம் வைத்த தட்டிலோ சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். இதெல்லாம் புது காதல், அதனால தான் இப்படி பண்ணுறாங்க என்று நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். இந்த காதலுக்குள் பல அறிவியலும், ஆன்மீகமும் ஒளிந்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?

why wife eat husband plate

கணவர் சாப்பிட்ட எச்சில் உணவை மனைவி சாப்பிடும்போது கணவரின் கைப்பட்ட சில ஜீன்கள் மனைவியின் உள்ளே செல்லும். அந்த ஜீன் மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் செல்வதால் தான் கணவரின் சில பழக்கங்களோடு குழந்தை பிறக்கிறது. அதேபோல கணவர் சாப்பிடும் நேரம் வந்துவிட்டால் என் மனைவி நான் இல்லாமல் சாப்பிடமாட்டார் என்கிற எண்ணம் வருவதற்காகத் தான் மனைவி கணவரின் எச்சில் உணவை சாப்பிடுகிறார்.

why wife eat husband plate

தங்கள் வாழ்க்கையில் வரப்போகும் தங்கள் சிசுவும் தங்களை போன்ற பழக்கங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் கணவர் சாப்பிட்ட இலையில் மனைவியும் சாப்பிட வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர். இஸ்லாம் முறைப்படி ஒருவர் சாப்பிட்டு முடித்த பின்னர் மற்றொருவர் கையை சூப்பும் வரை அதற்கு முன்னர் சாப்பிட்ட கணவர் எழுந்திரிக்கக் கூடாது என்பது நபிகள் நாயகம் சொன்ன விஷயம். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் மனைவி தானே அந்த எச்சில் உணவை சாப்பிட்டு கை சூப்புவார். காரண காரியங்கள் இல்லாமல் நம் முன்னோர்கள் எந்த விஷயத்தையும் செய்யவில்லை என்பது இந்த நிகழ்வில் இருந்து தெளிவாகிறது.

why wife eat husband plate