தத்வமஸி

#WoW: இதைப் படிப்பவர்கள் விபூதியைத் தவிர்க்கவே மாட்டார்கள்!

Feb 27 2020 10:50:00 AM

விபூதியை அப்படியே அள்ளி நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக்கொள்ளும் முறை "உள் தூளனம்" என்று சொல்லப்படுகிறது. ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் என மூன்று விரல்களால் இடைவெளி விட்டு, மூன்று கோடுகளாக விபூதியைத் தரித்துக் கொள்ளும் முறை "திரிபுண்டரீகம்" எனப்படுகிறது.

spiritual worship god

விபூதியை மோதிர விரலால் எடுப்பதுதான் சிறந்தது. நம் உடலில் பவித்ரமான பாகம் என்று அது தான் கூறப்படுகிறது. வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று, விபூதியை எடுத்து கீழே சிந்தாமல், வலது கையின் ஆட்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல் ஆகியவற்றால் எடுத்து, அண்ணாந்து நெற்றியில் பூச வேண்டும்.

spiritual worship god

"திருச்சிற்றம்பலம்"அல்லது "சிவாயநம" அல்லது "சிவ சிவ" என்று சொல்லி விபூதி அணிந்து கொள்ள வேண்டும். காலை, மாலை மற்றும் இரவு படுக்கப் போகும் போதும், வெளியே கிளம்பும் போதும் விபூதி தரிக்க வேண்டும். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் விபூதி தரிக்கவே கூடாது. சுவாமி முன்பும், குரு முன்பும், சிவனடியார் முன்பும், முகத்தைத் திருப்பி நின்று விபூதி அணிய வேண்டும்.

spiritual worship god

தலை நடுவில், நெற்றி, மார்பு நடுவில், தொப்புள் மேல், இடது தோள், வலது தோள், இடது கை நடுவில், வலது கை நடுவில், இடது மணிக்கட்டு, வலது மணிக்கட்டு, இடது இடுப்பு, வலது இடுப்பு, இடது கால் நடுவில், வலது கால் நடுவில், முதுகுக்குக் கீழ், கழுத்து, வலது காதில் ஒரு பொட்டு, இடது காதில் ஒரு பொட்டு என மொத்தம் 18 இடங்களில் விபூதி அணியலாம் என்று சைவ ஆகமங்கள் கூறுகின்றன.