தெய்வீகம்

நெய்வேதியம் என்றால் என்ன? எதற்காக நெய்வேதியம் செய்ய வேண்டும்? ஒருவேளை பல வருடமாக நெய்வேதியம் செய்யவில்லை என்றால் என்னவாகும்?

Jan 11 2022 11:41:00 PM

வீட்டில் சாமிப்படம் வைத்திருக்கிறீர்களோ இல்லை சாமிசிலை வைத்திருக்கிறீர்களோ எதை வைத்திருந்தாலும் கட்டாயம் சாமிக்கு நெய்வேதியம் அவசியம் செய்யவேண்டும். நெய்வேதியம் என்பது பஞ்ச பாத்திரம் எனும் செம்பு பாத்திரம் முழுக்க நீர் நிரப்பி எடுத்துவைத்து கொள்ளுங்கள். பஞ்ச பாத்திரம் வாங்கும்போதே அதில் ஒரு ஸ்பூன் போன்ற ஒரு கரண்டியை போட்டு தான் கொடுப்பார்கள். அதோடு சின்ன செம்பு தட்டு ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். சாமிக்கு வைக்கும் எந்த ஒரு பட்சணத்தையும் இந்த தட்டில் தான் வைக்க வேண்டும். கண்டிப்பாக எவர் சில்வர் கூடவே கூடாது. 

nei-vaithiyam vallalar

உதாரணத்திற்கு இப்போது சாமிக்கு நெய்வேதியமாக பொட்டுக்கடலை, சர்க்கரை வைப்பதாக கொள்வோம் (கண்டிப்பாக வெள்ளை சர்க்கரை கூடவே கூடாது, வெல்லம், நாட்டு சர்க்கரை மட்டுமே வைக்கலாம்) சாமிக்கு தூப, தீப ஆராதனை காட்டிவிட்டு, இறுதியாக நெய்வேதியம் செய்ய வேண்டும். அதாவது அந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள நீரை, அந்த கரண்டி போல உள்ள உபகரணம் மூலம் சாமி படங்களை சுற்றி வலப்புறமாக மூன்றுமுறை காட்டுங்கள். பின்னர் சாமிக்கு காட்டுங்கள்.

nei-vaithiyam vallalar

இப்படி செய்யும்போது, வள்ளலார் பெருமாளை நினைத்து கொண்டு, 'அருட்பொருஞ்சோதி அருட்பொருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பொருஞ்சோதி' என் சொல்லி வேண்டி கொள்ளுங்கள். உங்க வம்சத்திற்கே அன்ன குறைபாடு வராது.

nei-vaithiyam vallalar

சரி என்னவெல்லாம் நெய்வேத்யமாக செய்யலாம் என்றால், வீட்டில் உள்ள பொட்டுக்கடலை, பழவகைகள் என எதை வேண்டுமானாலும் நெய்வேதியம் செய்யலாம். இல்லை அதெல்லாம் எங்களால் முடியாது என்றால் நீங்க உங்களுக்காக சமைக்கும் எதையும் சாமிக்கு நெய்வேதியம் செய்யலாம். அது எச்சை படாமல் இருந்தால் போதும். காலையில் சாமிக்கு நெய்வேதியம் செய்தால், மதியமே அந்த நெய்வேதியத்தை உண்டுகொள்ளலாம். சோற்றை நெய்வேதியமாக வைப்பவர்கள் ஒரு கைப்பிடி வைத்தால் போதுமானது. 

nei-vaithiyam vallalar

இது இல்லாமல் வீட்டில் கொண்டாடும் விஷேச நாட்களன்று செய்யப்படும் பலகாரங்களையும் தாராளமாக சாமிக்கு படைக்கலாம். கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்கிறோம், உண்மையில் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பி தானே வேண்டுகிறோம்? அப்படியானால் அந்த கடவுளுக்கு பசிக்காதா? நாம் மட்டும் உண்டுகொண்டிருப்போம். கடவுள் நாம் உண்பதை பார்த்துக்கொண்டிருப்பாரா? இனியாவது கடவுளிடம் கோரிக்கைகளை மட்டும் வைக்காமல் கொஞ்சம் நெய்வேதியமும் செய்யுங்கள். பல வருடமாக உங்கள் வீட்டில் பட்டினியாக இருந்த தெய்வங்கள் இனியாவது பசியாறட்டும்.