தெய்வீகம்

அதென்ன பெருமாள் கோவிலில் உட்கார கூடாது, சிவன் கோவிலில் கண்டிப்பாக உட்கார வேண்டும்! தூசியை கூட உதறிவிட்டு தான் வரணும்! பிரசாதத்தை நின்று கொண்டே உண்ண வேண்டுமாம்!

Aug 17 2021 01:01:00 PM

சிவன் சொத்து குலநாசம், அதனால் கோவிலை விட்டு வெளியே செல்லும் முன்னர், நாம் சிவன் கோவிலில் இருந்து எதையும் எடுத்து செல்ல கூடாது என்பார்கள். சிவன் கோவிலில் உள்ள தூசை கூட நாம் எடுத்துவர கூடாது. சிவன் கோவிலில் உட்கார்ந்துவிட்டு எழும்போது, உ டலில் உள்ள துகள்களை கூட உதறிவிட்டு எழுந்து செல்வோம். அதனால் தான் சிவன் கோவிலில் உட்கார வேண்டும் என்கிறார்கள். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் சிலை காணாமல் போய், பொன். மாணிக்கவேல் அவர்களால் அந்த சிலை மீட்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சிவன் சொத்து குலநாசம் எனும்போது, சிவன் கோவிலின் சிலையை திருடியவர்களுக்கு என்ன ஆனது? என நீங்க கேட்க வருவது புரிகிறது. எல்லாம் அவன் செயல் என கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு நகர வேண்டும். ஏனெனில் சிவன் கோவிலில் இருந்து தூசை கூட எடுத்துவரக்கூடாது எனும்போது, சிலை கடத்தியவர்களுக்கு என்ன ஆகுமோ? 

perumal-temple shiva-temple

பெருமாள் கோவிலில் உட்கார்ந்து விட்டு செல்ல கூடாது என்பார்கள். ஏனெனில் பெருமாளுடன் வாசம் செய்யும் லட்சுமி தேவியை, நாம் கூடவே நமது வீட்டிற்கு எடுத்து செல்லும் விதமாக, பெருமாள் கோவிலில் உட்காராமல் செல்ல சொல்கிறார்கள். ஏனெனில் நாம் வணங்கும் பெருமாளுடன் உள்ள லட்சுமி தேவி மறதி குணம் கொண்டவராம். நீங்க கோவிலில் சாமியிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்கும்போது, மறுக்காமல் எல்லாவற்றையும் கொடுக்கும் குணம் கொண்டவர் லட்சுமி தேவி. நீங்க கேட்ட எல்லாவற்றையும், உங்களுக்காக கொடுத்துவிட்டு வர தான் கிளம்புவார்.  

perumal-temple shiva-temple

நீங்க கோவிலில் அமரும்போது, லட்சுமி தேவியும் உங்களோடே அமர்ந்து விடுவார். முன்னர் சொன்னதுபோல் தான் லட்சுமி தேவி மறதி குணம் கொண்டவர். நீங்க எழுந்து போகும் போது, உங்களோடு வராமல் அப்படியே அங்கேயே அமர்ந்து கொள்வார். பிறகு வீட்டிற்கு நீங்களும் உங்க வேண்டுதலும் தான் செல்ல வேண்டும். நீங்க கேட்டதை கொடுக்கும் லட்சுமி தேவி வரமாட்டார். அதேபோல் பெருமாள் கோவிலை தரிசித்துவிட்டு வேறு எங்கேயும் செல்லக்கூடாது, நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ஏனெனில் கூடவே வரும் லட்சுமி, வழியில் நீங்க ஏதாவது கடைக்கு போகலாம் என சென்றால், நீங்க செல்லும் இடத்திற்கு சென்றுவிடுவார். பெருமாள் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை கூட அங்கு உட்கார்ந்து உண்ணக்கூடாது. வீட்டிற்கு எடுத்து வந்து தான் உண்ண வேண்டும்.