தத்வமஸி

பிற மதத்தினர் , இந்துக்களின் பிரசாதங்களை வாங்கி உண்கிறார்களா? இல்லையெனில் உண்ண தயக்கம் காட்டுவது ஏன்?

Feb 03 2020 12:39:00 PM

கொஞ்ச தயக்கம் தான் எனக்கு..! கோவிலில்  சாமி  கும்பிட்டு வந்ததும்  வரிசைல நின்னு பிரசாதம் வாங்கிசாப்பிட.. ஆனால், நான் கோயிலுக்கு போறதே பிரசாதம் வாங்கத்தானே.. சிவபெருமானே! பெருமாளே! என்னை மன்னிச்சுடுங்க. உங்கள பார்க்க தான் வர்றேன். ஆனாலும் அந்த பிரசாதம் மேல ஒரு கண்ணு..! என்ன செய்ய டேஸ்ட்டு நாக்குல ஒட்டிக்குச்சு. அடடா! என்ன ஒரு டேஸ்ட்,  காசு கொடுத்து வாங்கினாலும் இந்த சுவை கிடைக்க மாட்டேங்குது..அதான் பிரசாதம் கொடுக்கற நேரமா பார்த்து கோவிலுக்கு போயிடுறேன். நாமளே எப்போ பிரசாதம் தருவாங்கன்னு கோவிலுக்கு  வந்தா,நமக்கு முன்னாடி இவனுங்க  ஒரு மைல்க்கு க்யூல நிற்கிறாங்க. நாம் மட்டும்தான் அலையறோம்னு பார்த்தா,ஊரே இந்த டேஸ்ட்டுக்கு அடிமை.

spritual healing yoga peace love

'ஐயோ! நான் போறதுக்குள்ள பிரசாதம் தீர்ந்திடக் கூடாது கடவுளே' னு என்னோட மைண்ட் வாய்ஸ் சொல்லி 
முடிகிறதுக்குள்ள   "பிரசாதம் தீர்ந்து விட்டது " னு ஒரு வாய்ஸ்.. 'உன்னோட ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே!' என இன்னொரு மைண்ட் வாய்ஸ். ஏமாற்றத்தோடு கோவிலை விட்டு வெளியே போன எனக்கு,காத்திருந்தது முச்சந்தி விநாயகர் கோவில் பிரசாதம்.. அந்த தெருவில்  இந்துக்கள் குறைவாக இருந்ததால் நிறைய பிரசாதம் கிடைத்தது. பிரசாதம் உண்டதும் எனது ஏழாவது அறிவு எனக்கு ஒரு கேள்வியை எழுப்பியது."பிற மதத்தினர்  நமது பிரசாதத்தை உண்பதில்லையே. நாம மட்டும் அவர்கள் கொடுக்கும் கேக், ஜம்ஜம் நீர், ரம்ஜான் பிரியாணிய வெளுத்து கட்டறோமே?"  இதே கேள்வியை பல்வேறு மதத்தை சார்ந்த என்னோட  நண்பர்கள்கிட்ட கேட்டதும் அவர்கள் சொன்ன பதில்,

spritual healing yoga peace love

"நீ கொடுக்கற பிரசாதம் சாப்பிட கூடாதுனு எந்த மதத்திலும் சொல்லல, அப்படி சாப்பிட்டால் எங்கள் சாமிக்கு பிடிக்காது என்றும் எந்த மதத்திலும் சொல்லல . எல்லா மதத்திலும் சொல்வது அன்பு மட்டுமே! நான் உன்னோட பிரசாதத்தை வேண்டாம் என சொல்லி உன்னோட மனசை காயப்படுத்தினால் மட்டுமே, எங்க கடவுள் கோபித்துக்கொள்வார் " என அவள் கூறியதும் தான் எனக்கு புரிந்தது.. எல்லா கடவுளும் போதனைகள் மூலம் மனிதனுக்கு கூற முயல்வது அன்பை மட்டுமே!  "அப்போ யார் உருவாக்கியது வேற்றுமைகளை..? " என என்னோட ஏழாம் அறிவு அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்துவிட்டது.