தகவல்கள்

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டார் தெய்வங்களை வணங்குவதில்லையா? மறைந்திருக்கும் உண்மை என்ன? கேட்டால் இது பெரியார் மண் என்பார்கள்!

Sep 02 2021 01:58:00 PM

ஏதாவது ஒன்று நமக்கு பிடிக்கவில்லை என்றால், அதோடு விட்டுவிட வேண்டும். நமக்கு பிடிக்காதது பிறருக்கும் பிடிக்கக்கூடாது என்ற எண்ணம் வரவே கூடாது. என்னுடைய நண்பர் சரியான பகுத்தறிவாதி. எதனையும் காரணத்தோடு அணுகுவதாக சொல்லிக்கொள்வார். ஒரு நாள் கோவிலுக்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்த போது, பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டார் தெய்வங்களை வணங்குவதில்லை என்றார். பேசும் போதே ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்துவிட்டார் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.

god worship naatr

நான் கேள்விப்பட்ட வரைக்கும் நண்பர் சொன்னது போல, எந்த பிராமண நண்பர்களும் நாட்டார் தெய்வங்களை வணங்க தவறியதில்லை. எவருமே தங்கள் கிராமத்து தெய்வத்தை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெரிய அலுவலர் ஒருவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் தான். அவர் தனது ஊர் ஐயனார் கோயில் திருவிழாவில் கட்டாயம் கலந்து கொள்வது வழக்கம். எனக்கு தெரிந்த ஐயர் குடும்பம் அமெரிக்காவிலிருந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து தம் கிராமத்துக் குலதெய்வமான மாரியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

god worship naatr

இதன்படி பார்த்தால், பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டார் தெய்வங்களை வணங்குவதில்லை என்று பரவி வரும் நம்பிக்கை, வேண்டுமென்றே பரவ விடப்பட்டது போலத்தெரிகிறது. நாட்டார் தெய்வ உருவங்களைக் குலதெய்வமாக எவ்வளவோ பிராம்மணர்கள் அவரவர் சொந்த கிராமங்களில் இன்றும் நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். கோவை மாவட்டம் பக்கம், பொள்ளாச்சி அருகே  பல பிராமணர்கள் மாசானியம்மன் கோவிலுக்கு வருவதை பலமுறை பார்த்திருக்கிறேன். 

god worship naatr

வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. அதனை வைத்து தேவையில்லாத வதந்திகளை பரப்பும் கூட்டம், இதனால் என்ன ஆதாயம் அடையப்போகின்றனர் எனத்தெரியவில்லை. நமக்கு பிடிக்கவில்லை என்றால் அது எல்லோருக்குமே பிடிக்கக்கூடாது என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டால், பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை.