ஆன்மீகம்

வீட்டில் யாராவது தூங்கிக்கொண்டிருக்கையில் விளக்கேற்றினால் என்ன நடக்கும்? சாமி கும்பிடும் போது தப்பித்தவறியும் செய்யக்கூடாத தவறு!

Sep 08 2021 04:58:00 PM

வீட்டில் விளக்கேற்றுவது ஒன்றும் சாதாரண செயல் கிடையாது. அதற்குப் பின்னால் பல ஆன்மீக இரகசியங்கள் பொதிந்து கிடக்கிறது. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும் போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாதுன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டுமாம். ஒருவர் கண்மூடியிருக்கும் நிலையில் விளக்கேற்றுவது இறந்தவர்களாக பாவிக்கப்படுவதற்கு சமமாகுமாம். இது தெரியாமல், எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் பலமுறை விளக்கேற்றியிருக்கிறேன்.

deepam benefit light

குடும்பத்தில் நிலவி வரும் கஷ்டங்கள் நீங்க, நினைத்த காரியம் நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான். தீப ஒளி பரவும் இடத்தில் தெய்வ அணுக்கிரகம் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் எதிர்மறை சக்தி இருப்பதாக உள்மனது சொல்லுதோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம். கெட்ட சக்திகளை உட்கிரகித்துக்கொண்டு, நல்ல நேர்மறையான அலைகளை பரவ விடும் சக்தி தீபஒளிக்கு உண்டு. எப்போதும் தீபத்தில் உள்ள எண்ணெய் மட்டும்தான் எரிய வேண்டுமே தவிர, என்னைக்கும் திரியை கருமை நிறமாக மாறும் வரையில் எரிய விடக்கூடாது. எப்போதும் திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

deepam benefit light

விளக்கை ஏற்றும் நேரத்தில் வீட்டில் பின் வாசல் இருந்தால், அதன் கதவை சாத்தி விட வேண்டும். முன்கதவு வழியே மட்டும் தான், தெய்வ கடாட்சம் நம்மை நெருங்க வேண்டும். விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது தீப எண்ணெயில் கைவைத்து எந்த செயல்களையும் செய்யக்கூடாது. உதாரணத்துக்கு கைவிரலால் எண்ணெயிலுள்ள தூசியை எடுப்பதோ, திரியை தூண்டுவதோ கூடாது. மாறாக ஊதுபத்தி குச்சியை வைத்து திரியை தூண்டி விடலாம்.

deepam benefit light

இந்த ஒன்றை மட்டும் மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். என்னைக்கும் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது. அதுவும் வாயால் ஊதி அணைப்பது ரொம்ப தப்பு. பெண்கள் தீபத்தை அணைக்கும் போது, கைகளால் காற்று வீசி, அணைக்க வேண்டும். வாயால் ஊதி அணைக்கக்கூடாது. இந்த மாதிரி எத்தனையோ நம்பிக்கைகள் தெய்வ வழிபாட்டில் புதைந்து கிடக்கு. ஏதாவது விடுபட்டிருந்தால் உங்களுக்கு தெரிந்ததையும் பகிரலாம்.